தினைநகர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு இளங்கொம்பன்னாள் உடனுறை சிவக்கொழுந்தீசர்


மரம்: கொன்றை
குளம்: சாம்புவ தடாகம்

பதிகம்: நீறுதாங்கிய -7 -64 சுந்தரர்

முகவரி: தீர்த்தனகிரி அஞ்சல்
கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம், 608801
தொபே. 04142 278324

இக்காலம் இவ்வூர் தீர்த்தநகரி என்று வழங்கப்பெறுகின்றது. சிதம்பரத்திலிருந்து கூடலூர்க்குப் போகும் இருப்புப்பாதையில் உள்ள புதுச்சத்திரம் என்னும் தொடர்வண்டி நிலையத்துக்கு வடமேற்கே ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது.

பள்ளர் வகுப்பில் பெரியான் என்னும் சிவபக்தன், நிலத்தை உழுது கொண்டிருக்கையில் இறைவர் சங்கமர் போல் அங்குவந்து அன்னம் கேட்க, அச்சிவபக்தர் தன்னூர்க்குச் சென்று கொண்டு வருவதாகச் சொல்லி சென்றார். அவர் வருவதற்குள் உழுதிருந்த நிலத்தில் தினை விளைந்து பழுத்திருக்கும்படிச் செய்து மறைந்துவிட்ட காரணத்தால் இப்பெயர் (திருத்தினை நகர்) பெற்றது என்பர்.

இறைவர்:- சிவக்கொழுந்தீசர். இத்திருப் பெயரை இவ்வூர்ப் பதிகத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் எடுத்து ஆண்டிருப்பது மகிழ்தற்குரியது.

இறைவி:- இளங்கொம்பன்னாள்.

தலவிருட்சம்:- கொன்றை.




கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1904 No. 115-127.)

இத்திருக்கோயிலில் சோழமன்னரில் மூன்றாங்குலோத்துங்க சோழன் காலத்திலும், பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தர பாண்டியன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன், திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சுந்தர பாண்டியன் இவர்கள் காலங்களிலும், விஜயநகர வேந்தரில் வீரப்பிரதாப கிருஷ்ண தேவராயர் காலத்திலும், பல்லவரில் சகலபுவனச் சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கன் காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு அருகில் உள்ள கல்வெட்டு, கோனேரின்மை கொண்டான், தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் குலோத்துங்க சோழநல்லூரில் திருத்தினை நகர்ப் பெருமானுக்கு 50 வேலி நிலத்தைக் கொடுத்ததைக் கூறுகின்றது. மகாமண்டபத்திலுள்ள கல்வெட்டு, கோப்பெருஞ்சிங்கதேவன் தன் இருபதாம் இராச்சிய ஆண்டில் சென்னாதநல்லூர் என்னும் கிராமத்தைக் கொடுத்துள்ளதைக் குறிப்பிடுகின்றது.

இங்குள்ள ஒரு மண்டபத்துக்கு அய்யன் அங்காரகன் மண்டபம் என்று பெயர். இக்கோயிலில் கோதண்டராமன் சந்திக்கு நிலம் விடப்பட்டிருந்தது. திருநாவுக்கரசு சுவாமிகளுக்குத் திருவிழா நடத்தப்பட்டு வந்தது.

 
 
சிற்பி சிற்பி