சாய்க்காடு
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு குயிலினும் இன்மொழியம்மை உடனுறை இரத்தின சாயாவனேசுவரர்


மரம்: சாயா வனம்
குளம்: ஐராவத தீர்த்தம்

பதிகங்கள்: நித்தலுந்நிய -2 -38 திருஞானசம்பந்தர்
மண்புகார் -2 -41 திருஞானசம்பந்தர்
தோடுலாமலர் -4 -65 திருநாவுக்கரசர்
வானத்திளமதி -6 -82 திருநாவுக்கரசர்

முகவரி: காவிரிபூம்பட்டினம் அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609105
தொபே. 04364 260151

(சாய் என்பதற்குத் தமிழில் கோரை என்று பொருள். கோரைக்காடு செறிந்த இப்பகுதி சாய்க்காடு என்று பெயர் பெற்றது. சாய் என்னும் வழக்கு, கோரை என்ற பொருளில் பழந் தமிழ் நூல்களில் உள்ளது.``அயத்து வளர் பசாய்`` என்பது காண்க.)

ஆதிசேடனது நாகமணி ஒளி வீசியதால் இப்பெயர் பெற்றது என்பர். இவ்வொளிக்குச் சாய் ஒளி என்பர். இது சாயாவனம் எனவும் வழங்கப்பெறும்.

இது சீகாழிக்குத் தென்கிழக்கே 11.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்பதாவது ஆகும். சீகாழி, மயிலாடுதுறை ஆகிய நகரங்களிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

இறைவரது திருப்பெயர்:- அமுதேசுவரர், சாயாவனேசுவரர். இறைவியாரது திருப்பெயர்:- குயிலினும் நன்மொழியம்மை. தீர்த்தம் காவிரி, ஐராவததீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் இருக்கின்றது.

உபமன்னியு முனிவர் பூசித்துப் பேறுபெற்றனர். இந்திரனது தாயார் நாளும்வந்து இத்தலத்தைப் பூசித்துவந்தனர். அவரது கஷ்டத்தைப் போக்க, இந்திரன் சிவலிங்கத் திருமேனியைத் தேவ உலகிற்குக் கொண்டுபோக எண்ணித் தோண்டிப் பார்த்தான். பாதாள லோகம்வரை அவருடைய திருமேனி சென்றிருந் தமையால் அவரை மீளவும் அங்கேயே எழுந்தருளச் செய்வித்தான் என்பர்.

இதற்குச் சம்பந்தர் பதிகங்கள் இரண்டு அப்பர் பதிகங்கள் இரண்டு ஆக நான்கு இருக்கின்றன.

இத்தலத்தை ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாடியுள்ளனர். அப்பாடல் பின்வருமாறு:-

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பமதாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.



கல்வெட்டு:

இங்கே 13 கல்வெட்டுக்கள்படி எடுக்கப்பட்டன. அவைகளில் 10 சோழர்களுடையன. 3 பாண்டியர்களுடையன.

சோழர் எழுத்துக்கள் பிற்காலச் சோழர்களுடையவைதான். நாடு: இராஜாதிராஜ வளநாடு நாங்கூர் நாடு. ஊர்: காவிரிப்பூம் பட்டினத்துத் திருச்சாய்க்காடு என்பது.

குலோத்துங்கன் III காலத்தில் சேகரித்த நெல் வழி பாட்டிற்கும், பழுது பார்ப்பதற்கும் பயனாயிற்று. மற்ற நாயக்கர்கள் விளக்குக்காக நிலதானம், கோயிலுக்கு மிளகு தருவதற்கு நிலக் குத்தகை, அந்தணர்க்கு அமுது அளிக்க நிலதானம், 50 பிராமணர் களுக்கு உணவளிக்க நிலம் அவர்களுக்கு இருக்க மடம் கட்டியது முதலியன. வரிகொடாத நிலத்தார் கோயிலுக்கு நிலத்தைக் கொடுக்கும் படி ஆணையிடப்பட்டார்கள்.

குணாகரன் கோயிலுக்கு நிலதானம் செய்த செய்தி ஒரு செய்யுளால் கூறப்பட்டுள்ளது. மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு ஒன்று நிலதானம் கூறுகிறது. சகம் 1679 (கி.பி.1757) கல்வெட்டு ஒன்றில் இராயராவுத்த பிண்டன் என்பவன் வழிபாடு, விழாக்கள், பழுதுபார்த்தல் இவைகளுக்காகப் பூதானம் செய்தான்.

இத்திருக்கோயிலில் விக்கிரம சோழதேவன், கோனேரின்மை கொண்டான், மூன்றாங் குலோத்துங்க சோழன், திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன், திருபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழ தேவன், மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன் ஆகிய இவர்கள் காலங்களில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவ்வூர், இராஜாதிராஜ வளநாட்டு, நாங்கூர் நாட்டு, காவிரிப்பூம்பட்டினத்துத் திருச்சாய்க்காடு எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இக்கோயில் நிலங்கள் வேறு சிலரால் அநுபவிக்கப் பெற்றிருந்தன. அவைகளைக் கோனேரின்மை கொண்டான் திரும்பப் பெற்று, அவைகளில், இராஜராஜன் திருநந்த வனம் எனத் தன் பெயரால் நந்தவனத்தை ஏற்படுத்தினான். பிள்ளை அம்பர் உடையார் காளிங்கராயர் உத்தரவின்படி இறைவற்குத் திருவமுது உள்ளிட்ட வைகளுக்கும், திருக்கோயிலைப் பழுது பார்ப்பதற்கும், நிலவருவாயில் இவ்வளவு இவ்வளவு நெல் ஒதுக்கப்பட வேண்டுமென்று திட்டம் வகுக்கப்பெற்றது. இது நிகழ்ந்தது மூன்றாங் குலோத்துங்க சோழ தேவரின் முப்பத்தைந்தாம் ஆண்டா கும். இராஜாதிராஜ வளநாட்டு, திருவிந்தளூர்நாட்டு, மருதமங்கலத்து மலைமேல் மருந்தான வானவன் விழுப்பரையன் முன்னரே இத்திருக் கோயிலில் ஒன்றரை விளக்கு (?) எரியும்படி ஏற்பாடு செய்திருந்தான். திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் ஐந்தாம் ஆண்டில் இன்னும் அரைவிளக்கு எரிப்பதற்கு நிலநிவந்தம் அளித்துள்ளான். சோழ மன்னரது மந்திரி திருச்சிற்றம்பலவன் ஒரு மடம் ஒன்றைக்கட்டி, அதில் ஐம்பது பிராமணர்கள் உண்பதற்கு நிலம் அளித்திருந்தான். திருச்சாய்க் காட்டூர் சீமைக் காவிரிப்பூம்பட்டின மாகாணத்து காவிரிப் பூம் பட்டினத்தில் பல்லவனேச்சரக் கோயிலுக்குத் திருவிழாவிற்கும், பழுதுபார்ப்பதற்கும், நாயராவுத்த முண்டன் முதலானவர்களால் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சகம் 1679 கலியுகம் 4775 ஆகும்.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1912, No. 261-273, pages 21-22.)

 
 
சிற்பி சிற்பி