சக்கரப்பள்ளி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு தேவநாயகி உடனுறை சக்கரவாகேசுவரர்


குளம்: காக தீர்த்தம், காவிரி

பதிகம்: படையினார் -3 -27 திருஞானசம்பந்தர்

முகவரி: அய்யம்பேட்டை அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம், 614201
தொபே. 04374 292971

திருமால் வழிபட்டுச் சக்கரம் பெற்ற தலமாதலால் இப் பெயர் பெற்றது. ``வண்சக்கிரம் மால் உறைப்பால் அடிபோற்றக் கொடுத்த பள்ளி``என்னும் இவ்வூர்ப்பதிக அடியே இதற்குச் சான்றாகும். இது கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர்க்குச் செல்லும் இருப்புப்பாதையில் ஐயன் பேட்டை மேற்கே 1 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரித்தென்கரைத் தலங்களுள் 17 ஆவது ஆகும். இறைவரின் திருப்பெயர் - சக்கரவாகேசுவரர். இறைவியின் திருப்பெயர் - தேவநாயகி. இலிங்கபுராணம் முதலியவற்றில் சிறப்பித்துச் சொல்லப்பெற்ற ஏழு பதிகளுள் ஒன்று. ஏனையவை. அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை, பசுபதிமங்கை என்பனவாம். இத் தலத்தை இந்திரனின் மகனாகிய சயந்தன் வழிபட்டுப் பேறுபெற்றான். இதற்கு ஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று இருக்கிறது.



கல்வெட்டு:

இக்கோயில் கல்வெட்டுக்களில், இவ்வூர் குலோத்துங்க சோழவளநாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்ப்பேதிமங்கலம் என்று குறிக்கப்பெற்றுள்ளது. மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12ஆம் ஆட்சி ஆண்டில், இவ்வூர்ச் சபைக்கு நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்தாம் உறுப்பினராக நிற்க வேண்டுமென்றும் அவர்களும் பத்தாண்டிற்குள் நிற்காதவர்களாகவும் இருக்கவேண்டுமென்றும் விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்ஙனம் விதித்ததனால் எல்லாரும் ஊர்ச்சபையில் பங்கெடுத்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். இளம் பருவத்தினரும், அநுபவ முதிர்ச்சி இல்லாதவரும் உறுப்பின ராக நிற்பதைத் தடுப்பதற்கு இது வழியாகும்.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் முப்பதாம் ஆண்டுக் கல்வெட்டு, நிலம் குத்தகைக்கு விடப்படுவதற்குச் சில விதிகளை உணர்த்துகின்றது. இதன்படி நில உரிமை உடையவர்களுள் நிலத்தை உழுது பயிரிடுபவர்களும் குழப்பமின்றி நிம்மதியாய் இருக்கலாம்.

 
 
சிற்பி சிற்பி