கூடலையாற்றூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு புரிகுழல் நாயகி உடனுறை நெறிகாட்டு நாயகர்


மரம்: வில்வம்
குளம்: மணிமுத்தா நதி, வெள்ளாறு

பதிகம்: வடியுடைமழு -7 -85 சுந்தரர்

முகவரி: காவலாகுடி அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம், 608702
தொபே. 9942249938

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திலிருந்து இருபது கி.மீ. தொலைவில் உள்ள குமாரகுடி என்னும் ஊர்க்குச் சென்று அங்கிருந்து ஆறு கி.மீ. சென்றால் இவ்வூரையடையலாம். இக்காலம் பேருந்து வசதி உண்டு.

மணிமுத்தா நதியும் வெள்ளாறும் கூடுமிடத்தில் உள்ளது. ஆகையால் இப்பெயர் பெற்றது. வெள்ளப் பெருக்கினால் கோயில் அழிந்தமையால், அக்கற்களைக் கொண்டு வந்து ஊரில் திருக்கோயில் கட்டி அதில் இறைவர் இறைவியாரை எழுந்தருளப் பண்ணியுள்ளனர்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருமுதுகுன்றத்துக்கு எழுந்தருளியபோது இக்கூடலையாற்றூரை வணங்காமல் போந்தருள, இறைவர் அந்தணர்வடிவங்கொண்டு முன் செல்ல, சுந்தரமூர்த்தி நாயனார் திருமுதுகுன்றத்துக்கு வழி யாது? என்று கேட்டருளினார். அந்தணராகிய இறைவர், `கூடலையாற்றூர்க்குப் போகும்வழி இது` என்று கூறி மறைந்தருளினார். சுந்தரமூர்த்தி நாயனார் அவ்வந்தணர் சிவபெருமானே என்று அறிந்து திருவருளை வியந்து பாடியருளிய தலம் இது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி