ஒன்பதாம் திருமுறை
29 பதிகங்கள், 301 பாடல்கள், 14 கோயில்கள்
001 கோயில் - `ஒளிவளர் விளக்கே
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 9 பண் : பஞ்சமம்

தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும்
    தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம்
    நெறித்தரு ளியஉருத் திரனே
அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட
    ஆடப்பொன் னம்பலத் தாடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்
    தொண்டனேன் தொடருமா தொடரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
முதலாவது குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com

இரண்டாவது குரலிசை: சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை :

தக்கனுடைய மேம்பட்ட மனிதத் தலையும், வேள்வித்தலைவனுடைய வலிய தலையும், தாமரை மலரில் உள்ள நான்கு முகத்தவனாகிய பிரமனுடைய ஐந்தாம் தலையும், ஒரு சேரத் துண்டமாகி உருளுமாறு ஒளி பொருந்திய அழகிய புருவத்தை நெறித்து வெகுண்ட, அழித்தற்றொழில் உடையவனே! சங்குமணிகள் மேலே அணியப்பெற்ற புலித்தோலை ஆடையாக அணிந்து, அம்மணிகளும் தோலாடையும் பலபடியாக அசையுமாறு பொன்னம்பலத்தில் ஆடும் அழகனே! எத்தகைய தவ வலிமை உடையவரும் தம் முயற்சியால் அணுகமுடியாதபடி உள்ள உன்னை உன் அடியவனாகிய நான் தொடர்ந்து வருமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

குறிப்புரை :

இத்திருப்பாட்டின் முதல் இரண்டடிகளுட் போந்த பொருளை, தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ
(தி.8 திருச்சாழல் - 5)
எனவும்,
நாமகள் நாசி சிரம்பிர மன்பட (தி.8 திருவுந்தியார் - 13)
எனவும் திருவாசகத்துள்ளும் போந்தமை காண்க. `எச்ச வன்தலை` எனவும் பாடம் ஓதுப. புருவம் நெறித்தருளிய என்றது, `வெகுண்ட` என்றவாறு. `புலித்தோல் ஆடைமேல் அக்குஅணி ஆடஆட ஆடும் சொக்கன்` என்க. அக்கு அணி - எலும்பு மாலை. சொக்கன் - அழகன். தொடர்தல் - இடை விடாது பற்றுதல்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
O! Destroyer that makes everyone weep!
The queller of four-faced Brahma`s
Head number five. Chopper of the chief
Of Takkan`s sacrifice, knocker of Takkan`s
Head, rolling all by jamming brows in a fit of fury.
Dancer ruddy in auric spatium clad in chank
And gem-laid Tiger Hyde! Dear for all to follow,
May you will me your servient one to close in on your grace.
Translation: S. A. Sankaranarayanan (2007)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
thakkan:na'r 'ralaiyum echchanvan 'ralaiyum
thaamarai :naanmukan thalaiyum
okkavi'n duru'la o'ndirup puruvam
:ne'riththaru 'liyauruth thiranae
akka'ni puliththoa laadaimael aada
aadappon nampalath thaadum
sokkanae evarkkum thodarvari yaayaith
tho'ndanaen thodarumaa thodarae.
சிற்பி