ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 8

காரானை யீருரிவைப் போர்வை யானைக்
    காமருபூங் கச்சியே கம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை
    அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
    பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கரிய யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தியவன். விருப்பம் மருவிய பொலிவினை உடைய காஞ்சி நகரத்தின் ஏகம்பம் என்ற திருக்கோயிலை உகந்து எழுந்தருள்பவன். அடியவர்களை அண்மித்திருப்பவன். தம் முயற்சியால் அறிய முயலும் தேவர்களுக்கு அளவிட முடியாதவன். நிலவுலகத்தவரும் வானுலகத்தவரும் தன்னை வணங்குமாறு கூத்தினைப் பயில்கின்ற ஒளி உருவன் ஆகி எண்ணற்ற திருநாமங்களை உடையவன். அத்தகைய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

குறிப்புரை :

ஆரேனும் - உலகியலில் குலம் முதலியவற்றால் எத்துணை இழிந்தவராயினும் ; இவர்கட்கு இறைவன் அணியனாய் நின்றமையை உண்மை நாயன்மார் பலரது வரலாற்றில் காண்க. ` ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் - ஆரேனுங் காணா அரன் ` என்பது. ( திருக்களிற்றுப்படியார் - 15.) அடியவர் - உடல் பொருள் ஆவி எல்லாவற்றாலும் தம்மை இறைவற்கே யுரியவராக உணர்ந்தொழுகுவார். அளவிலான் - வரையறைப் படாதவன் ; அகண்டன் என்றபடி. ` நடம் ` என்பது ` நட்டம் ` என விரிக்கப்பட்டது. பரஞ்சுடர் - மேலான ஒளி. ` ஒளி என்பது அறிவே ` என மேலும் ( தாண்டகம் -1) குறிக்கப்பட்டது. ` பெயர் ` என்பது, ` பேர் ` என மருவிற்று. காமரு - விரும்பப்படுகின்ற. பூ - அழகு.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
He is mantled in the pachyderma of the dark tusker;
He is Ekampan of lovely Kaanchi damasked with flowers;
He is easy of access to his servitors--whoever they be;
He is the infinite One unknown to the celestials;
He is the Light of the Empyrean who enacts the dance Whilst the earth-born and the heaven-dwellers adore Him;
His names are legion;
He is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kaaraanai yeerurivaip poarvai yaanaik
kaamarupoong kachchiyae kampan thannai
aaraenum adiyavarkad ka'niyaan thannai
amararka'luk ka'rivariya a'lavi laanaip
paaroarum vi'n'noarum pa'niya :naddam
payilkin'ra paranjsudaraip paranai e'n'nil
paeraanaip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae.
சிற்பி