ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 5

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
    அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
    வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
    பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

ஒப்பற்ற துணைவன், அடியவர்களின் துயரைப் போக்கும் அமுதம் போன்றவன். பரந்த இவ்வுலகில் பிறப்பெடுத்த பின்னர் உடன்தோன்றும் துணைவர், ஏனைய சுற்றத்தார், செல்வம் இவற்றிலுள்ள பாசத்தை நீத்து, பெரியபுலன்களின்மேல் செல்லும் மனத்தை அடக்கி, மகளிரோடும் படுக்கையில் நுகரும் சிற்றின்பப் பயனை அடியோடு நீக்கி, ஏனைய தெய்வங்களோடு பொதுவாக நினைப்பதனை விடுத்துத் தன்னையே விருப்புற்று நினைத்தலில் வல்ல அடியவர்களுக்கு எக்காலத்தும் உடனாய் நின்று உதவும் துணைவன் ஆகிய பெரும்பற்றப்புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

குறிப்புரை :

அருந்துணை - ஒப்பற்றதுணை. அருமருந்து - கிடைத்தற்கரிய மருந்து ; அமிழ்தம். ` தோன்றி ` என்பது ` தோன்றிய பின்னர் ` எனப்பொருள்தரும். வரும் துணை - உடன்தோன்றும் துணைவர். பற்று - செல்வம். வான்புலன் - பெரிய புலன்களின் மேற் செல்லும் மனம். புலன்கட்குப் பெருமை கடக்கலாகாமை. தன்னைப் பொதுநீக்கி ` நினையவல்லார்க்கு ` என மாற்றியுரைக்க. பொது நீக்கி நினைதலாவது, கடவுளர் பலருள் ஒருவனாக நினையாது, அவர் எல்லார்க்கும் தலைவனாக நினைதல். மெய்யுணர்வு வாய்க்கப் பெற்றார்க்கன்றி அது கூடாமையின், ` வல்லோர்க்கு ` என்று அருளிச் செய்தார். பெருந்துணை - யாதொன்றற்கும் வேறு துணை நாட வேண்டாது, எல்லாவற்றிற்கும் யாண்டும் உடனாய் நின்று உதவும் துணை. இறைவன் அத்தகையோனாதலை, அமணர் இழைத்த தீங்குகள் பலவற்றினும் நாவரசர் கண்டருளினமையை நினைவு கூர்க.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
He is the peerless Support,
the Catholicon That solves the troubles of all His servitors Who have inly controlled and quelled the great senses,
Who have done away with the help of friends And kinnery that had taken birth in this wide world,
Who have given up attachment also And who have forsaken the pleasure Yielded by buxom belles in wondrous beds.
To such that are endowed with the valiancy To think wholly,
solely and exclusively on Him,
He indeed is the supreme Help;
He is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
aru:nthu'naiyai adiyaartham allal theerkkum
arumaru:nthai akangnaalath thakaththu'l thoan'ri
varu:nthu'naiyunj su'r'ramum pa'r'rum viddu
vaanpulanka'l akaththadakki madavaa roadum
poru:ntha'naimael varumpayanaip poaka maa'r'rip
pothu:neekkith thanai:ninaiya valloark ken'rum
peru:nthu'naiyaip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae.
சிற்பி