ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பாடல் எண் : 10

காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
    கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
    திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
    ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

கரிய உடல் ஒளியை உடையவனும் சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலும், நறுமணம் கமழும் செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் தன் அடியையும் முடியையும் காணமுடியாதபடி சீரிய ஒளியை உடைய தீப்பிழம்பாய் நின்ற பழைய மேம்பட்ட ஒளியை உடையவன். உள்ளத்தில் உள்ள மயக்கத்தைப் போக்கும் ஞான ஒளியானவன். பெரிய இந்நில உலகையும், வானத்தையும், தேவர் உலகையும் உள்ளிட்ட ஏழு உலகங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பாலும் பரவும் எல்லையற்ற பேரொளிப் பிழம்பாய் இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

குறிப்புரை :

கார் ஒளிய - கருநிறத்தினனாகிய. ` தொல்லை ஒளி ` என்றருளியது, அவ்விருவர்க்கும் முன்னோன் ஆனதுபற்றி ` ` காணா வண்ணம் நின்ற ஒளி ` என்றருளியது, உயிர்கள் கட்டுற்றுள்ள நிலையில் அவற்றிற்குத் தோன்றாது நின்று மறைத்தலைச் செய்தல் பற்றியும், ` சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏர்ஒளி ` என்றருளியது, அவை பருவம் எய்திய நிலையில் வெளிப்பட்டு நின்று அருளுதலைச் செய்தல்பற்றியும், ` ஏழுலகும் கடந்து அண்டத்தப்பால் நின்ற பேரொளி ` என்றருளியது, அவ்வருள் வழிச் சென்று உலகிறந்து நின்ற வழி அநுபவிக்கப்படும் பெரும் பொருளாதல் பற்றியும் என்க. திகழ்தல் உளதாதலையும், ஏர்தல் தோன்றுதலையும் ( எழுதலையும் ), பெருமை அளவின்மையையும் உணர்த்தும் என்க. கடிக்கமலம் - நறுமணத் தாமரை. ` இருந்தயன் ` என்பதும் பாடம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
He is the hoary and abiding Light That stood a column of glorious flame Beyond the ken of the darkly-bright and red-eyed Maal And the one ensconced on the fragrant Lotus;
He is the Light beautiful that sets at nought Bewilderment;
He is the Light infinite that abides Beyond the extensive earth,
the seven worlds,
The ether and the heavens.
He is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kaaro'liya thirumaenich sengka'n maalung
kadikkamalath thiru:nthavanung kaa'naa va'n'nam
seero'liya thazha'rpizhampaay :nin'ra thollaith
thikazho'liyaich si:nthaithanai mayakka:n theerkkum
aero'liyai iru:nilanum visumpum vi'n'num
aezhulakung kada:ntha'ndath thappaal :nin'ra
paero'liyaip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae.
சிற்பி