ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 4

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும் மேலைவல்வினையாகிய துவந்துவங்களும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன ? தில்லைமாநகரிலே திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாததொர் அடிமைபூண்ட எனக்கு அவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யவல்லன அல்ல.

குறிப்புரை :

அல்லல் - ஆகாமியமாகிய எதிர்வினை. அருவினை - நுகர்ந்தாலன்றித் தீர்த்தற்கரிய பிராரத்தவினை. தொல்லை வல்வினைத் தொந்தம் - பிராரத்த வினையநுபவம் உள்ள அளவும் உள்ள முயற்சியின் விளைவாய்ப் பருவத்தில் இன்ப துன்பங்களைப் பயக்கத்தக்க இருவினை எனப்படும் சஞ்சிதம். துவந்துவம் - இரட்டை. நல்வினை தீவினை, அறம் மறம், இன்பம் துன்பம் என்னும் இரட்டை களையும் அவைபோல்வனவற்றையும் வடமொழியில் துவந்துவம் என்பர். அது தமிழில் தொந்தம் என்று வழங்குகிறது. ` என்புள்ளுருக்கி இருவினையை ஈடழித்துத் துன்பங்களைந்து துவந்துவங்கள் தூய்மை செய்து முன்புள்ளவற்றை முழுதழிய உள்புகுந்த அன்பின் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே ` ( தி.8 குலாப்.3) என்னும் திருவாசகத்தில் துவந்துவங்கள் தூய்மை செய்தல் சஞ்சித வினையையும், இருவினையையும், ஈடழித்தல் ஆகாமியத்தையும், துன்பங்களைதல் பிராரத்தத்தையும் குறித்தல் காண்க. ` தொண்டன் ` என்பது பாடமாயின், வல்வினையாகிய அடிமை எனக்கொள்க. இருவினை இறைவன் ஆணையின் வரும் என்பது சாத்திரம். பரமுத்தியிலும் ஆன்மா முதல்வனுக்கு அடிமையாதலின் ` எல்லையில்லதோர் அடிமை ` என்றருளிச் செய்தார். ` மீளா அடிமை ` ( தி.7. ப.95. பா.1) என்னும் நம்பியாரூரர் வாய்மொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
to the Lord in Ciṟṟampalam in the big city of Tillai.
to me who became a servant which knows no time limit and from which I cannot redeem myself what effect can suffering have on me?
what harm can the action from which it is difficult to be freed, do to me?
what harm can the dual, old strong actions do to me?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
alla lenseyum aruvinai yenseyum
thollai valvinaith tho:ntha:nthaa nenseyum
thillai maa:nakarch si'r'ram palavanaark
kellai yillathoa radimaipoo'n daenukkae.
சிற்பி