ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 11

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக் காத்து அழிக்கவல்ல சதுரப்பாடுடையவன் ; திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவன். இப் பெருமான் எழுந்தருளியுள்ள திருமலை எனப்படும் திருக்கயிலாய மலையை அசையும்படி, செருக்கினால் ஆரவாரம் செய்து எடுத்த இராவணனுடைய பத்து முடிகளும் வருந்தும்படி மெள்ள ஊன்றும் செம்மையான திருவடியைச் சென்று கை தொழுது உய்க.

குறிப்புரை :

மதுரம் - இனிமை. சர்வசங்கார காலத்துப் பெருமானது சினத்தைத் தணித்து மீண்டும் படைத்தற்றொழிலைச் செய்யவல்ல மொழியுடையாள் ஆதலின் ` மதுரவாய்மொழி மங்கை ` என்றார். பங்கு - இடப்பாகம். செம்பாதியும் கொண்டதையல் ( முத்துக் -. பிள்ளை. ) சதுரன் - சதுரப்பாடு உடையவன். ` பூவண்ணம் பூவின் மணம்போல மெய்ப்போத இன்பம், ஆவண்ணம் மெய்கொண்டவன் தன் வலியாணைதாங்கி, மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்யவாளா மேவு அண்ணல் ` ( திருவிளையாடல் ) ஆதலின் சதுரன் என்றார். திருமலை - கயிலைமலை. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறித்தலைப் போலத் திருமலை என்பது கயிலையைக் குறிக்கும். அதிர - நடுக்கத்தால் அதிர்ச்சியடைய, ஆர்த்து - ஆணவத்தால் செருக்கி ஆர வாரித்து. மிதிகொள் சேவடி - மிதித்தலைக் கொண்ட எனவும் மிதித்து மீள அருள் செய்துகொண்ட எனவும் இருபொருள் பட நின்றது.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
one who has a young maid who speaks sweet and true words on one side of his form.
clever one one who is in Ciṟṟampalam to crush the ten heads of Rāvaṇaṉ who removed the mountain (Kailācam) and shook it will a roaring noise.
save yourselves by going on pilgrimage and reaching the red feet which trampled (upon them) Note: It is a distinguishing feature of Tirunāvukkaracu to mention the Rāvaṇaṉ anecdote in the last stanza of every patikam .
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
mathura vaaymozhi mangkaiyoar pangkinan
sathuran si'r'ram palavan thirumalai
athira aarththeduth thaanmudi paththi'ra
mithiko'l saevadi sen'radai:n thuymminae.
சிற்பி