நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
001 திருவதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10
பதிக வரலாறு : பண் : கொல்லி

நீரார் கெடில வட நீள் கரையின் நீடுபெருஞ் சீரார் திருவதிகை வீரட்டானஞ் சேர்ந்து நாதன்தாள் நண்ணுவாராய்த் தூய சிவ நன்னெறியே சென்று, பேராத பாசப் பிணிப்பு ஒழிய ஆராத அன்பு பெற்று விளங்கிய திலகவதியார், அச் செம்பவளக் குன்றை - சுடரொளியைத் தொழுது, "என்னை ஆண்டருளினீர் ஆகில், அடியேன் பின் வந்தவனை, ஈண்டு வினைப் பரசமயக் குழி நின்றும் எடுத்தாள வேண்டும்" எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தார். பவ வினை தீர்ப்பவர் அதைத் திரு வுள்ளம் பற்றினார்; தபோதனியாரது கனவின் கண் போந்தார்; "நீ உன் மனக்கவலையை ஒழி. என்னை அடைய முன்னமே முனி யாகித் தவமுயன்றுள்ளான் உன் உடன் பிறந்தான்; அன்ன வனைச் சூலைமடுத்து ஆள்வன்" என அருளினார்.
அவ்வாறே மருணீக்கியாரைச் சூலைநோய் வடிவாய் நின்று தடுத்துக் கொணர்ந்த திருவருள், செய்தவமாதரது திருமடத்திற்ச் சேர்த்தது.
அக்கையார் அடியில் விழுந்து இறைஞ்சினார் தம்பியார். "பெருமானருளை நினைந்து எழுந்திரீர்" என மொழிந்தார் திலகவதியார். மருணீக்கியார் எழுந்து தொழுதார். "இஃது அதிகைப் பிரான் அருளே. அப்பற்றறுத்த பரமனடி பணிந்து பணி செய்வீர்" எனப் பணித்தார். அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்சினார் மருணீக்கியார். திலகவதியார் சிவ பெருமான் திருவருளை நினைந்து திருநீற்றைத் திருவைந்தெழுத் தோதிக் கொடுத்துத் திருவீரட்டம் சென்று உள்ளே புகக் குறித் தார். அத் திருவாளன் திருநீற்றினை அப் பெருந்தகையார் பெரு வாழ்வு வந்தது எனப் பணிந்து ஏற்று அங்கு உருவார அணிந்து வந்தார்.
உற்ற விடத்து உய்யும்நெறி தர முன்பு தோன்றிய திலக வதியார் முன்னே செல்லப் பின்னே சென்றார் பிற்றோன்றலார்.
திருப்பள்ளியெழுச்சி வேளை. திருநீறணிந்த அவர் அகத்திருளும் மாறிற்று. உலகில் இரவில் நிறைந்த புறத்திருளும் போயிற்று.
ஆண்டிற் சிறுமையும் அடிமையிற் பெருமையுமுடைய அம்மையார் திருத்தொண்டிற்குரியவற்றொடு தம்பியாரைக் கொண்டு திருவதிகை மாநகருள் புகுந்தார். இருவரும் தொழுதனர்; வலங்கொண்டிறைஞ்சினர்; நிலமிசை விழுந்து வணங்கினர்.
தம்பிரான் திருவருளால் மருணீக்கியார் உரைத்தமிழ் மாலைகள் சார்த்தும் உணர்வு பெற்றார்; அதனை உணர்ந்தார்; உரைத்தார்; அவற்றுள் முதலாவது "கூற்றாயினவாறு விலக்ககி லீர்" என நீடிய (தி.12 திருநாவு. 70.) இக்கோதில் திருப்பதிகம்.

சிற்பி