மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 8 பண் : காந்தார பஞ்சமம்

வேயி னார்பணைத் தோளியொ டாடலை வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமு
தாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனே
தீயி னார்கணை யால்புரம் மூன்றெய்த செம்மை யாய்திகழ் கின்றசிற் றம்பலம்
மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மூங்கிலைப் போன்ற பருத்த தோளுடைய காளியொடு திருக்கூத்தாடுதலை விரும்பினவனே, விகிர்தனே, வணங்கிய உயிர்கட்கு அருளமுதமாகியவனே, இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே, தீக்கடவுளைக் கூரிய முனையாக் கொண்ட திருமாலாகிய கணையால் திரிபுரத்தை எய்த செம்மையனே, திருவருளாகி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தைத் திருநடங் கொள்ளும் இடமாக விரும்பியவனே, நின் கழலடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம்.

குறிப்புரை :

வேயின் - மூங்கில் போல. ஆர் - பொருந்திய பணைத் தோளியோடு - திரட்சியாகிய தோளையுடையவளாகிய காளியுடன், ஆடலை வேண்டினாய் - ஆடுதலை விரும்பியவனே ! ( தோள் + இ ; இகரம் பெண்பால் விகுதி ) உண்ண இனித்து மரணத்தை யொழிக்கும் அமிர்தம்போல் ` சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று பிறந்த பிறப்பு அறுக்கும் பெருமான் ஆனவனே !` தீயின் ஆர்கணையால் - தீயாகிய அம்பினால், திரிபுரம் எரித்த அம்பின் நுனிப் பாகம் தீயாயிருந்தமையால், தீயினார் கணை எனப்பட்டது. அம்பின் அடிப்பாகம் காற்று ; நுனி தீ ; அம்பு திருமால் என்பவற்றை, ` கல்லானிழற் கீழாய்இடர் காவாயென வானோர் எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின் றுய்ப்ப வல்லாய்எரி, காற்று, ஈர்க்கு, அரி, கோல், வாசுகி, நாண்கல், வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே ` ( தி.1 ப.11 பா.6) என்னும் இடத்தில் காண்க. மேயினாய் - மேவினாய். கழலே - திருவடிகளையே, எய்துதும் - அடைவோம்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
you desired dancing with Kāḷi who has big shoulders like bamboos.
God, who is different from the world!
you became the nectar for all living beings.
oh one who desired to dance in the fire of the burning ground!
you, the just one who burnt the three cities with arrow tipped at the end with fire.
you desired ciṟṟampalam which is shining with beauty.
we shall reach the upper world Civalōkam by worshipping your feet only.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
vaeyi naarpa'naith thoa'liyo daadalai vae'ndi naayvikir thaauyir kadkamu
thaayi naayidu kaadderi yaadala mar:nthavanae
theeyi naarka'nai yaalpuram moon'reytha semmai yaaythikazh kin'rasi'r 'rampalam
maeyi naaykazha laethozhu theythuthum maelulakae.
சிற்பி