மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 6 பண் : காந்தார பஞ்சமம்

ஆகந் தோய்அணி கொன்றை யாய்அனல் அங்கை யாய்அம ரர்க்கம ராவுமை
பாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்கா
மாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம் மன்னி னாய்மழு வாளி னாய்அழல்
நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண் ணாவினையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

திருமேனியில் தோய்ந்த அழகிய கொன்றை மாலையை யுடையவனே ! தீ ஏந்திய திருக்கையனே ! தேவ தேவனே ! அம்பிகை பாகமுடைய பகவனே ! பலி ஏற்றுத் திரியும் பாண்டரங்கக் கூத்தனே ! வானளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே நிலைபெற்றவனே ! மழுவாளை ஏந்தியவனே ! நச்சுத் தீயையுடைய அரவக் கச்சணிந்த திருவரையினனே ! உன் அடியவரை வினைகள் அடையா. ( ஆதலின், உனக்கு அடிமை பூண்ட எமக்கும் வினை இல்லை என்றவாறு.)

குறிப்புரை :

ஆகம் - மார்பில், தோய் அணிகொன்றையாய் - தோயும் அழகிய கொன்றை மாலையை யுடையவனே ! அனல் அங்கையாய் - உள்ளங்கையில் அனல் ஏந்தியவனே ! அமரர்க்கு அமரா - தேவ தேவனே ! ( அமரர் - தேவர் ; மரணம் இல்லாதவர்.) பகவா - பகவனே ! ஐசுவரியம், வீரியம், ஞானம், புகழ், திரு, வைராக்கியம், என்னும் இவ்வாறு குணங்களையும் உடையவன் பகவன். அது சிவபெருமானையன்றி, மற்றெவரையுங் குறிக்காது. மாகம்தோய் - ஆகாயத்தை அளாவிய. பொழில் - சோலை, மல்கு - வளம் நிறைந்த, அழல் நாகம் - விடத்தையுடைய பாம்பு. தோய் - சுற்றிய, அரையாய் - இடுப்பையுடையவனே ! ( அரை - அளவையாகு பெயர் ) உன் அடியவரை வினை நண்ணாதனவாகும்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
you have koṉṟai flowers that nest on the chest.
you carry in your palm fire.
Lord of the celestial beings.
Oh pakavaṉ!
whose form has been shared by Umai.
one who performed the dance of pāntaraṅkam and was wandering receiving alms.
you resided permanently in ciṟṟampalam where gardens are thriving and seem to touch the sky.
one who has the weapon of maḻu.
you who has a poisonous serpent tied round the waist as a belt.
the twin actions will not go near your devotees.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
aaka:n thoaya'ni kon'rai yaayanal angkai yaayama rarkkama raavumai
paaka:n thoaypaka vaapali yae'r'ruzhal pa'ndarangkaa
maaka:n thoaypozhil malkusi'r 'rampalam manni naaymazhu vaa'li naayazhal
:naaka:n thoayarai yaayadi yaarai:na'n 'naavinaiyae.
சிற்பி