மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 3 பண் : காந்தார பஞ்சமம்

நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றி மேல்உற்ற கண்ணி னார்பற்று
சூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார்
சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழக்
கோலத் தாய்அரு ளாய்உன காரணம் கூறுதுமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நீல நிறத்தைப் பொருந்திய கரிய திருக் கழுத்தினர் ( திருநீலகண்டர் ). அழகிய நெற்றிக் கண்ணினர். திரிசூலம் பற்றியவர், காடுடைய சுடலைப் பொடி பூசியவர், சடையினர், சீலம் மிக்கவர் ஆகிய தில்லைவாழந்தணர் வணங்கியேத்தும் திருச்சிற்றம்பலத்தை இடைவிடாது நினைந்து சேர்தலால். திருக்கோலம் உடைய நடராசப் பெருமானே ! நின் கழலணிந்த சேவடியைக் கையால் தொழ அருள் செய்தாய். உன்னுடைய காரணங்களை (முதன்மையை)க் கூறுவேம்.

குறிப்புரை :

இத்திருப்பாடல், தில்லைக்குச் செல்லுங்கால், திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு எதிர்வந்து தில்லைவாழந்தணர்கள் சிவகண நாதர்களாகத் தோற்றம் அளித்த உண்மையை உணர்த்திற்று. நீலத்து - நீலமணியைப் போல், ஆர் - பொருந்திய, கரிய - கருமையையுடைய. நீலம், கறுப்பு, பச்சை இவற்றுள் ஒன்றைப் பிறிது ஒன்றாகக் கூறும் வழக்கு உண்மையை ` பச்சைப் பசுங் கொண்டலே ` ( மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். பா.1) என்று வருவதாலும் அறிக. மிடற்றார் - கண்டத்தையுடையவர், பற்று சூலத்தார் - கையில் சூலம் பற்றியவர், சேர்தலால் பற்றுக் கோடாக, நாங்கள் சேர்ந்தமையாலும், உன காரணம் கூறுதும் - எல்லாவற்றிற்கும் நீயே காரணனாம் தன்மை களைக் கூறுவோம். கோலத்தாய் அருளாய் - அழகையுடையவனே, உன் சிவந்த திருவடி மலர்களைத் தொழ எமக்கு அருள்வாயாக. சேவடி ( யைத் ) தொழ அருளாய் எனக் கூட்டுக. ` அவனருளாலே அவன் தாள் வணங்கி ` என்றல் கருத்து. நீலகண்டம், முக்கண், சூலம், திருநீற்றுப் பூச்சு, வார்சடை இக்கோலத்தோடும் தில்லைவாழந்தணரைத் தாம் கண்டமை குறித்தருள்கிறார். இதனைச் சேக்கிழார் பெருமான் ` நீடும் திருத்தில்லை யந்தணர்கள் நீள் மன்றுள் ஆடும் கழற்கு அணுக்க ராம்பேறு அதிசயிப்பார் ` ( பெரிய. திருஞா. பா - 168) என்று தொடங்குவது முதலிய பாடல்களில் குறித்தருள்வது காண்க.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
he has a black neck resembling the nīlam blue nelumbo flower.
has an eye on the beautiful forehead.
is holding a trident in his hand.
smears himself with the minute ashes of the burning ground.
one who has matted locks.
This may be taken as as he is in ciṟṟampalam which is praised and worshipped with both hands by people of good conduct.
oh beautiful one!
bestow upon me your grace to worship with both hands your red feet wearing anklets.
we will speak about your pre-eminence.
Notes: blue nelumbo flowers.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:neelath thaarkari yamida'r 'raar:nalla :ne'r'ri maelu'r'ra ka'n'ni naarpa'r'ru
soolath thaarsuda laippodi :nee'ra'ni vaarsadaiyaar
seelath thaarthozhu thaeththusi'r 'rampalam saertha laalkazha'r saevadi kaithozhak
koalath thaayaru 'laayuna kaara'nam koo'ruthumae.
சிற்பி