மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 2 பண் : காந்தார பஞ்சமம்

கொட்ட மேகம ழும்குழ லாளொடு கூடி னாய்எரு தேறி னாய்நுதற்
பட்ட மேபுனை வாய்இசை பாடுவ பாரிடமா
நட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லை நல்ல வர்பிரி யாதசிற் றம்பலம்
இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

நறுமணம் கமழும் கூந்தலை உடைய சிவகாமி அம்மையாரொடு கூடியவனே, விடையேறியவனே, நெற்றிப் பட்டம் அணிந்தவனே, பூத கணங்கள் இசை பாடுவனவாகத் திருக்கூத்தாடுவோனே, ( அறிதற்கரிய ) வேதங்களை ஓர்கின்ற தில்லையில் வாழும் நல்லவராய அந்தணர் பிரியாத திருச்சிற்றம்பலத்தே விருப்பொடு வாழ்பவனே ! இவ்வைந்து கருணைச் செயல்களையும் மேவியது யாது காரணம் பற்றியோ ? கூறியருள்க.

குறிப்புரை :

பாரிடம் - பூதம். நட்டம் - நடனம். நவிலுதல் - பழகுதல். ` நட்டம் பயின்றாடும் நாதனே ` மறையோர் - வேதங்களை ஓர்கின்ற. ஓர் நல்லவர் - மறையோராகிய நல்லவர் எனலுமாம் : நல்லவர்,. சரியை கிரியா யோகங்களைச் செய்து பெறும் நன்னெறியாகிய ஞானத்தைப் பெற்றவர். கொட்டம் - நறுமணம் ` கொட்டமே கமழுங் கொள்ளம் பூதூர் ` எனப் பின்னும் வருதல் காண்க. நுதற் பட்டம் நெற்றியில் அணியும் ஓர் அணி. ` பட்ட நெற்றியர் நட்டமாடுவர் `. வீரர் அணிவது ` நுதலணியோடையிற் பிறங்கும் வீரப் பட்டிகை ` என்பதாலறிக . இசை பாடுவ - பாரிடம் ஆ ( க ) - பாரிடம் இசை பாடுவன ஆக. பாரிடம் - பூதங்கள். நட்டம் நவில்வாய் - திருக்கூத்தாடியருள்வீர். ` ஆளும் பூதங்கள் பாடநின்றாடும் அங்கணன் என வன்றொண்டப் பெருந்தகையார் அருளிச் செயலும் காண்க. நல்லவர் - நல்லொழுக்கின் தலைநின்றவராகிய தில்லைவாழந்தணர். நன்னெறியாகிய ஞானத்தை யுடையாருமாம். இவை மேவியது என்னை கொலோ ? - என்று வினவுகின்றார், அவை பெண் விருப்புடையான் போற் பெண்ணோடு கூடியிருத்தலும், ஊர்தியாக ஏறு ஏறுதலும், அணிவிருப்புடையான் போல் நெற்றிப் பட்டம் அணிந்தமையும், கண்டார் அஞ்சத்தக்க பூதங்களோடு கூடியாடுதலும், உலகில் எத்தனையோ தலங்களிருக்கத், தில்லைச்சிற்றம்பலத்தை இட்டமாக விரும்பியதும் அறிக.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
you are united with a lady of tresses which spread fragrance of costus root.
you were seated on the mount of bull.
you adorn your forehead with a gold plate.
you always dance having as songsters pāritam Bhūtagaṇam
you reside with great desire in the ciṟṟampalam in tillai from which good brahmins never part.
what is the reason for your wishing these things?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
kodda maekama zhumkuzha laa'lodu koodi naayeru thae'ri naay:nutha'r
padda maepunai vaayisai paaduva paaridamaa
:nadda mae:navil vaayma'rai yoarthillai :nalla varpiri yaathasi'r 'rampalam
idda maau'rai vaayivai maeviya thennaikoloa.
சிற்பி