மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 11 பண் : காந்தார பஞ்சமம்

நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்ம றைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும் இன்தமி ழால்உயர்ந் தார்உறை தில்லைதன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத் தீச னைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறு மாறுவல் லார்உயர்ந் தாரொடும் கூடுவரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

மணம் நாறும் பூஞ்சோலைகள் பொருந்திய சீகாழியுள் நான்கு மறைகளிலும் வல்ல திருஞானசம்பந்தர் ஊறும் இனிய தமிழால் சொன்னவையும், வேத சிவாகமங்களை யுணர்ந்த அந்தணர் மூவாயிரவர் வாழும் தில்லையுள் மேன்மேல் ஏறும் தொன்மைப் புகழ் தாங்கும் திருச்சிற்றம்பலம் உடையானைப் பண்ணிசையால் சொன்னவையும் ஆகிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாடுமாறு வல்லவர் தேவரொடுங் கூடி இன்பம் அடைவர். ( தி.3 ப.6 பா.11; தி.3 ப.31 பா.11; தி.3 ப.52 பா.11.)

குறிப்புரை :

நாறுபூம்பொழில் நண்ணிய காழி - மணக்கும் பூக்களையுடைய சோலை பொருந்திய காழியுள் ` ஞானசம்பந்தன் ` ஊறும் இன் தமிழால் - இனிமை ஊறும் தமிழால், ஏறு தொல் புகழ் ஏந்து - பழமையான மிக்க புகழைத் தாங்கிய. சிற்றம்பலத்து ஈசனைச் சொன்ன இவை வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவர் - உயர்ந்த சிவனடியாரோடுங் கூடும் பேறு பெறுவர். அடியாரொடு கூடி வணங்குவோர் உள்ளத்தில் இறைவன் உமாதேவியாரோடும் எழுந்தருள்வானாதலால் இங்ஙனம் கூறியருளினார். ` அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் ` என்ற திருவாசகத்தும் காண்க. பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் உயர்ந்தார் உறை தில்லையுள், புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை, ஊறும் இன்தமிழால், இசையாற் சொன்ன இவை பத்து ( ம் ) கூறுமாறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவர் என்க. கோயில் முதல் திருப்பதிகத்தின் 8ஆம் பாடலில் இராவணனையும் 9ஆம் பாடலில் பிரம விட்டுணுக்களையும் குறிக்கவில்லை.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
ñāṉacampantaṉ who is well versed in all the four vētams and was born in Kāḻi which has pleasing gardens spreading fragrance.
these ten verses which were composed in sweet tamiḻ with music about the Lord in the exalted ciṟṟampalam which has ever increasing ancient fame and which is situated in tillai where eminent people reside.
Those who are capable of reciting them will join with the resident of the celestials world after leaving this world.
Notes: Contrary to the distinguishing features of campantar`s tēvāram, the two things are omitted 1 rāvaṇaṉ has not been mentioned in the 8th verse 2 Brahman and Vishnu searching the feet and head of the Lord is not mentioned in the 9th verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
:naa'ru poompozhil :na'n'niya kaazhiyu'l :naanma 'raivalla gnaanasam pa:nthan
oo'rum inthami zhaaluyar:n thaaru'rai thillaithannu'l
ae'ru tholpukazh ae:nthusi'r 'rampalath theesa naiisai yaa'rsonna paththivai
koo'ru maa'ruval laaruyar:n thaarodum kooduvarae.
சிற்பி