மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 10 பண் : காந்தார பஞ்சமம்

வெற்ற ரையுழல் வார்துவர் ஆடைய வேடத் தாரவர் கள்உரை கொள்ளன்மின்
மற்ற வருல கின்னவ லம்மவை மாற்றகில்லார்
கற்ற வர்தொழு தேத்துசிற் றம்பலம் காத லால்கழற் சேவடி கைதொழ
உற்ற வர்உல கின்உறு திகொள வல்லவரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

ஆடையில்லாத அரையினராய்த் திரிவாராகிய சமணருரைகளையும் துவரூட்டிய ஆடையால் கொள்ளும் வேடத்தவராகிய தேரருரைகளையும் ஒரு பொருளுரையாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உலகத்து அவலங்களை மாற்ற வல்லாரல்லர். சிவாகமங்களைக் கற்று நாற்பாதங்களையும் வல்ல சைவர் தொழுது ஏத்தும் திருச்சிற்றம்பலத்தைக் கண்ட ஆராத காதலால், கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழ உற்றவரே உயிர்க்கு உலகினால் உள்ள உறுதி ( ஆன்ம லாபம் ) கொள்ள வல்லவராவர்.

குறிப்புரை :

வெற்றரையர் ( வெறு + அரையர் ) ஆடையணியாத இடுப்பினர், சமணர். துவர் ஆடையர் - மருதம் துவர் தோய்ந்த ( காவி ) ஆடையை யுடையவர், புத்தர். ( ஆகிய ) அவர்கள் உரை ( யைக் ) கொள்ளன் மின் - கேளாதீர்கள். அவர் , உலகின் அவலம் - உலகிற் பிறந்திறந்து உழல்வதாகிய துன்பத்தை, மாற்றகில்லார் - போக்கும் வலியற்றவர். ( ஆதலின் அவற்றை விடுத்து ) கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலத்தில், காதலால் - அன்போடு, கழல்சேஅடி - கழலை யணிந்ததால் சிவந்த குஞ்சித பாதத்தை. கைதொழ உற்றவர் - கையால் தொழுதல் உறுவோர், உலகின் உறுதி கொள வல்லார் - உலகில் மானிடப் பிறவியிற் பிறந்த பயனை அடைய வல்லவர் ஆவர். அது ` மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக்காயம் ஆனிடத் தைந்தும் ஆடு அரன் பணிக்காகவன்றோ ` என்றது ( சித்தியார் . சுபக்கம் 92) ` ஆக்கையாற் பயனென் அரன்கோயில் வலம் வந்து பூக்கையால் அட்டிப்போற்றி யென்னாத இவ்வாக்கையால் பயனென் `. ( தி.4 ப.9 பா.8)

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
jains who wander naked This refers to Digambara jains;
naked jains the followers of Buddha who wear a robe soaked in the yellow ochre of marutam bark;
Do not take the words of these people as truth.
they are incapable of removing the sorrow of the world.
in the ciṟṟampalam which is praised and worshipped by the learned people.
to do obeisance with both hands devotly to the red feet wearing anklets.
those who reached tillai are capable of enjoying the fruits of being born as a human being in this world.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
ve'r'ra raiyuzhal vaarthuvar aadaiya vaedath thaaravar ka'lurai ko'l'lanmin
ma'r'ra varula kinnava lammavai maa'r'rakillaar
ka'r'ra varthozhu thaeththusi'r 'rampalam kaatha laalkazha'r saevadi kaithozha
u'r'ra varula kinu'ru thiko'la vallavarae.
சிற்பி