13. உண்மைநெறி விளக்கம்
001 உண்மைநெறிவிளக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6
பாடல் எண் : 5

எப்பொருள்வந் துற்றிடினும் அப்பொருளைப் பார்த்திங்
    கெய்தும்உயிர் தனைக்கண்டிவ் வுயிர்க்கு மேலாம்
ஒப்பில்அருள் கண்டுசிவத் துண்மை கண்டு
    உற்றதெல்லாம் அதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச்செய் வதும்அதுவே நினைப்பும்அது தானே
    தரும்உணர்வும் பொசிப்பும்அது தானே யாகும்
எப்பொருளும் அசைவில்லை யெனஅந்தப் பொருளோ
    டியைவதுவே சிவயோகம் எனும்இறைவன் மொழியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

எப்பொருள் வந்து உற்றிடினும் அந்தப் பரமானந்த நிலை குலைந்து உலகமே வந்து பொருந்தினும்; அப்பொருளைப் பார்த்து அந்த உலகப்பொருளை அசத்தாய்ச் சடமாய் அழிந்து போகிற பாசமெனப் பார்த்து; இங்கு எய்தும் உயிர்தனைக் கண்டு இந்தப் பாசத்துட் பொருந்தாநின்ற உயிருக்குச் சுதந்தரமாய் ஒரு செய்தியும் இல்லையெனப் பார்த்து; இவ்வுயிர்க்கு மேலாம் ஒப்பில் அருள் கண்டு இவ்வான்மாவுக்கு ஒரு செயலற்றுந் தனக்கு மேலாய் ஒப்பற்ற அருள் கண்ணாக நிற்குமதனைக் கண்டு; சிவத்துண்மை கண்டு அவ்வருளினுட் பரையை அடியாகவுஞ் சுகத்தை முகமாகவும் ஆனந்தத்தை முடியாகவுங் கொண்டு நின்ற சிவத்தினது உண்மையைக் கண்டு ; உற்றதெல்லாம் அதனாலே பற்றி நோக்கி பொருந்திய உலகப் பொருளாகிய அவன் அவள் அதுவென்னுஞ் சடசித்துக்க ளெல்லாவற்றையும் அந்தச் சிவத்தினாலேதானே பற்றிப் பார்த்து ; தப்பினை... மொழியே மறப்பினைச் செய்வதும், நினைப்பினைச் செய்வதும், அறிவிக்க அறியும் ஆன்மபோதமும், கர்மப் பொசிப்புஞ் சிவன் தானேயென அறிந்து, அவனை யொழிய வேறொரு திரணமும் அசைவில்லை யெனக் கண்டு, அகமும் புறமும் அந்தச் சிவத்துடனே கூடி நிற்றலே சிவயோகமாமென்று சிவாகமங்கள் சொல்லும்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
epporu'lva:n thu'r'ridinum apporu'laip paarththing
keythumuyir thanaikka'ndiv vuyirkku maelaam
oppilaru'l ka'ndusivath thu'nmai ka'ndu
u'r'rathellaam athanaalae pa'r'ri :noakkith
thappinaichchey vathumathuvae :ninaippumathu thaanae
tharumu'narvum posippumathu thaanae yaakum
epporu'lum asaivillai yenaa:nthap poru'loa
diyaivathuvae sivayoakam enumi'raivan mozhiyae.
சிற்பி