13. உண்மைநெறி விளக்கம்
001 உண்மைநெறிவிளக்கம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6
பாடல் எண் : 3

எவ்வடி வுகளும் தானாம் எழிற்பரை வடிவ தாகிக்
கவ்விய மலத்தான் மாவைக் கருதியே ஒடுக்கி ஆக்கிப்
பவ்வமீண் டகலப் பண்ணிப் பாரிப்பான் ஒருவ னென்றே
செவ்வையே உயிருட் காண்டல் சிவரூப மாகு மன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

எவ்வடிவு... ஆகி சிவஞ் சத்தி நாதம் விந்து சதாசிவன் மயேசுரன் ருத்திரன் விட்டுணு பிரமா மற்றுமுள்ள வடிவுகளெல்லாந் தானே யாகின்ற சிறந்த பரைவடிவே தனக்கு வடிவாகி ; கவ்விய... ஆக்கி மலத்தைப் பிடித்துக் கிடக்கும் ஆன்மாக்களையும் அவ்வான்மாக்கள் ஆர்ச்சித்த வினைகளையும் அறிந்து பொசிப்பிப்பது காரணமாக மாயா காரியமாகிய உடலுந் தத்துவங்களும் புவனங்களும் பொசிக்கும் பதார்த்தங்களுமாக விசாரித்து நிறுத்திப் பொசிப்பித்துத் தொலைப்பிக்கு மளவிலே, வேலை கொள்வானொருவன் வேலை செய்வானொருவ னிளைப்புக்கண்டு நடுவே யிளைப்பாற்றி வேலை கொள்ளும் முறைமை போல, மலத்திடைப்பட்டுக் கிடக்குந் துயரந் தீருமளவும் மாயையின் காரியத்தை யொடுக்கிப் பின்னுமுண்டாக்கி ; பவ்வம்... அன்றே அப்படித்தாகு முறைமையை அடைவிலே தொலைப்பித்து இரட்சிப்பானொரு பரமேசுரன் வடிவு பரையென்றும் அது உயிர்க்குயிராய்த் திருவடி ஞானமாய் நின்று அறிவிப்பதைத் திருவருளையே இடமாக நின்று காணுதல் சிவரூபமாம்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
evvadi vuka'lum thaanaam ezhi'rparai vadiva thaakik
kavviya malaththaan maavaik karuthiyae odukki aakkip
pavvamee'n dakalap pa'n'nip paarippaan oruva nen'rae
sevvaiyae uyirud kaa'ndal sivaroopa maaku man'rae.
சிற்பி