சேந்தனார் அருளிச்செய்த திருவிசைப்பா
இத்திருப்பதிகம், சிவகுமாரனாம் முருகக் கடவுள்மேல் வந்தது. பதினொன்றாந் திருமுறையில் இவ்வாறு சிவகுமாரர் மேலும், சிவனடியார்மேலும் வரும் பகுதிகள் உளவாதலை அறிந்துகொள்க. இதன் ஆசிரியர் முருகன் பெயர் உடையராதல் இங்குக் கருதத்தக்கது. இதுவும், முன்னைத் திருப்பதிகம் போலச் செவிலிகூற்றாயும், அந்தாதியாயும் வருதல் காண்க. `இத் திருப்பதிகம் செவிலிகூற்றாக அருளப்பட்டது` என்பதனை ஆசிரியரே இதன் இறுதிப்பாடலில் அருளுதல் காண்க.
இந்தப்பதிகமும் இறைவனிடம் ஈடுபட்ட தன் மகள் திறம்பற்றித் தாய் கூறுவதாகவே அமைந்தது.
×
இக்கோயிலின் படம்
×
இக்கோயிலின் காணொலி
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
பலவகையினராக எண்ணிக்கையில் மிகுந்த அசுரர் கள் அழியும்படியாகத் தானே சென்று அவர்களுடைய மதில்களை வளைத்துக் கொண்டு பெரிய போரினைச் செய்த முயற்சி உடைய வனும், புகைமிக்க தீயால் திரிபுரம் அழியுமாறு செய்த, மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமானுடைய புதல்வனும், நாற்புறமும் பரவிய புகழை உடைய திருவிடைக்கழியில் திருக்குரா நிழலின் கீழ் நின்ற எண்ணிக்கையால் மிகுந்த பல திருப்பெயர்களை உடையவனும் ஆகிய முருகப் பெருமானுடைய திருவடிகளை அடைய வேறு வழி கிட்டாமையால், என்மகள் பெண்கள் மடலேறக்கூடாது என்ற பொது விதியை நெகிழ்த்து மடலேற ஆயத்தம் செய்துவிட்டாள்.
குறிப்புரை:
உழிஞை அமர், முற்றுகை இட்டுச் செய்யும் போர். தாளாளன் - வீரன். திகை - திசை. தொகை - எண்: அவை, நூறு, ஆயிரம், நூறாயிரம், கோடி முதலியவாம். நாமம் - பெயர். திருவடிக்கு-திருவடியை அடைதற்பொருட்டு; என்றது `தன்னைப் பணிகொள்ள ஏற்றுக் கொள்ளுதற்பொருட்டு` என்றவாறு. துடி இடை - உடுக்கை போலும் இடையை உடையாள். `கடலன்ன காமம் உழப்பினும் பெண்டிர் மடல் ஏறுதல் இல்லை` (குறள்-1137.) ஆயினும், அவளது பெருந்துயரைப் புலப்படுத்த, `மடல் ஏறத் தொடங்கினள்` என்றாள். `மயல் தொடங்கினள்` என்பதும் பாடம்.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
ಹಲವು ವರ್ಗದ ಅಧಿಕ ಸಂಖ್ಯೆಯ ಅಸುರರು ನಾಶವಾಗುವಂದದಿ ತಾನೇ ಹೋಗಿ ಅವರ ಗೋಡೆಗಳನ್ನು ಮುತ್ತಿಗೆಯಿಟ್ಟು ದೊಡ್ಡ ಯುದ್ಧವನ್ನು ಹೂಡಿದವನು, ತ್ರಿಪುರಗಳು ಬೂದಿಯಾಗುವಂತೆ ನಾಶಗೊಳಿಸಿದ, ಮೇರುಪರ್ವತವನ್ನು ಬಿಲ್ಲನ್ನಾಗಿ ಹಿಡಿದ ಶಿವಪರಮಾತ್ಮನ ಪುತ್ರನೂ, ನಾಲ್ದೆಸೆಗಳಲ್ಲಿಯೂ ಪ್ರಸಿದ್ಧಿ ಪಡೆದ ತಿರುವಿಡೈಕ್ಕಳಿಯಲ್ಲಿ ಬಿಲ್ವದ ಮರದ ನೆರಳಿನಲ್ಲಿ ಕೆಳಗೆ ನಿಂತ ಅಸಂಖ್ಯ ಪವಿತ್ರ ನಾಮಗಳಿರುವ ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ದೇವನ ಪವಿತ್ರವಾದ ಪಾದಗಳನ್ನೈದಲು ಬೇರೆ ದಾರಿ ಕಾಣದುದರಿಂದ, ನನ್ನ ಮಗಳು ಹೆಣ್ಣಿಗೆ ನಿಷೇಧವಾದ ತಾಲಾಶ್ವವನ್ನೇರಬಾರದು ಎಂಬ ಸಾಮಾನ್ಯ ನಿಯಮವನ್ನು ಮೀರಲು ಸನ್ನದ್ಧಳಾದಳು.
ಕನ್ನಡಾನುವಾದ : ಕೆ. ಮಲರ್ ವಿಳಿ, 2010
×
മലയാളം / மலையாளம்
വകവകയായ് ചൂഴ്ന്നുവന്ന അസുരരെ എല്ലാം വധം ചെയ്തു
വാന്നിലയുളളിലാക്കിയ വേലവാ, വീരാ
പുകപടരും അനലതാല് പുരം പൊടിയാക്കിയ
പൊന്മല വില്ലാളന് പുതല്വാ
തികമികു കീര്ത്തിത്തിരുവിടക്കഴിയിലെ
തിരുക്കടംബര നിഴലടിയതില് വന്നു നിന്ന
തൊകമികു നാമത്താന് നിന് തിരുവടി ചാര്ന്നിട
തുടിയിടയിവള് മടലേറിടത്തുടിക്കുന്നുവല്ലോ 76
तरह् तरह् के राक्षस लोग मराने लिए खुद ही आकर
आकाश में घेराबंदी किए नायक और
धुआँ बडाते आग से तिरिपुरं को चूर्ण किए
सोना पहाड धनुषवाले** का पुत्र
चारों ओर प्रसिद्धि फैलते तिरुविडैक्कळि में
तिरुक्कुरा पेड की छाया में खडे हुआ
बहुत अधिक नामधारी के पद्मपाद के लिए
छोटी कमरवाली मडल* चडाना शुरू की । - - ७.८
हिन्दी अनुवाद: देव महादेवन [ओरु अरिसोनन] 2024
** शिवदेव ने सोना मेरु पहाड को धनुष बनाके त्रिपुर राक्षसों का आकाश में उड़नेवाले किले को सत्यनाश किया!
* पुराना जमाने में, अगर एक जवान युवति एक जवान युवक को तिरस्कार करती तो, यो युवक अपने शरीर में बस्म लगाके, ताड का पत्ता पहनकर गधा पर घूम्ते थे। इसको तमिलनाडु में मडल चडना कहते थे। लड़कीयाँ ऐसा नहीं करते। मगर कार्तिकेय की प्यार निराश होने के वासते इस जवान लडकी मडल चडना शुरू की।
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
To root out the countless demons variform-He
Went on His own; seiged their forts; waged wars
As War-Lord is He; son to Civa that arched Meru
To ash the citadels triple in fuming flames,
His holy names numerous, He stands beneath
The Webera with a shade of sanctimony
In Tiruvidaikkazhi famed far in quarters four.
My girl, slim weisted, to get Him, broke the taboo of a ride on palmyrah stem.