ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
079 திருத்தலையாலங்காடு
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
    செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
    பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்
    பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் தன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே
 

× 6079004பதிக வரலாறு :

சுவாமிகள் , திருவீழிமிழலை , திருவாஞ்சியம் தொழுது திருமறைக்காடு செல்பொழுதில் புனிதர்வாழ் பதிகள் பல வணங்கி அருளியவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 263) குறிப்பு : இத் திருப்பதிகம் , சிவபெருமானது பெருமைகளைத் தனித் தனி நினைந்து , அப் பெருமானை அடையாது பலநாட்களை வீணே போக்கினமைக்கு இரங்கி அருளிச்செய்தது .
×

இக்கோயிலின் படம்

×

இக்கோயிலின் காணொலி

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 

பொழிப்புரை:

சிவனாய், நான்முகனாய்த் திருமாலாய், சூரிய சந்திரராய், தீயாய், நீராய், புவலோகமாய், புவனங்கள் யாவுமாய், பொன்னாய், மணியாய், முத்துமாய், வேண்டுமிடங்களில் வேண்டிய வாறே தோன்றுபவனாய், உயிர்கள் வாழ்தற்கேற்ற இடங்கள் யாவுமாய், இடபத்தை ஊர்ந்து திரியும் ஒரு கோலத்தை உடையனாய், தவ வேடந்தாங்கிநின்ற தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.

குறிப்புரை:

` சிவனாகி ` என்றது, ` உருத்திரனாகி ` என்றபடி, ` சுடர் ` என்றது ஞாயிற்றையும் திங்களையும். புவன் - புவலோகமாய் உள்ளவன் ; இது பூலோகத்தை அடுத்து நிற்றலின் வேறு ஓதியருளினார். ` பொன்னாகி ` முதலிய மூன்றனாலும், ` செல்வமாய் உள்ளவன் ` என்றவாறு. பவன் - வேண்டும் இடங்களில் வேண்டியவாறே தோன்றுபவன். திரிவான் ஓர் பவன் - திரிபவனாகிய ஒரு கோலத்தை யுடையவன். ` நின்ற தலையாலங்காடன் ` என இயையும். தவன் - தவக்கோலம் உடையவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

×

తెలుగు / தெலுங்க

శివుడై, చతుర్ముఖుడై, త్రివిక్రముడై, సూర్యచంద్రాగ్నులై, జలమై, నేలయై, సకలభువనాలై, బంగారమై, మణులై, ముత్యాలై, తలచిన చోటికివెళ్లి గోచరించగలవాడు. జీవులున్న చోట్లన్నీ తానైనవాడు. తపోవేషంతో కొలువున్న తలైయాలంగాడు శివుని ఆశ్రయించక నేను ఇంతకాలం వ్యర్థంగా గడిపాను. 4

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2024

×

ಕನ್ನಡ / கன்னடம்

Under construction. Contributions welcome.

×

മലയാളം / மலையாளம்

Under construction. Contributions welcome.

×

චිඞංකළමං / சிங்களம்

Under construction. Contributions welcome.

×

Malay / மலாய்

Under construction. Contributions welcome.

×

हिन्दी / இந்தி

प्रभु ब्रह्मा, विष्णु, ज्योतिस्वरूप सूर्य, चन्द्र, अग्नि, जल, आकाष आदि सप्त लोक के लिए स्वर्ण मणि मोती सदृष हैं। वे सर्व व्यापी हैं। वृषभ वाहन में भ्रमण करने वाले हैं। तापस मूर्ति प्रभु तिरुत्तलैयालंकाडु में प्रतिष्ठित हैं। धिक्कार है मैं अब तक उस प्रभु की स्तुति किए बिना जीवन व्यर्थ गवाँता रहा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000

×

संस्कृत / வடமொழி

Under construction. Contributions welcome.

×

German/ யேர்மன்

Under construction. Contributions welcome.

×

français / பிரஞ்சு

Under construction. Contributions welcome.

×

Burmese/ பர்மியம்

Under construction. Contributions welcome.

×

Assamese/ அசாமியம்

Under construction. Contributions welcome.

×

English / ஆங்கிலம்

He became Siva,
the Four-faced,
Tirumaal,
the ruddy Soorya,
Fire,
water,
earth and all the words gold,
ruby,
Pearl,
the One assuming all forms at will,
all the places,
The Rider of the Bull,
the Wanderer at will And the Tapaswi abiding at Talaiyaalangkaadu;
Alas,
alas,
I wasted many many days not seeking Him.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration :

×

𑀢𑀫𑀺𑀵𑀺 / தமிழி

Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀺𑀯𑀷𑀸𑀓𑀺𑀢𑁆 𑀢𑀺𑀘𑁃𑀫𑀼𑀓𑀷𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑀸 𑀮𑀸𑀓𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀜𑁆𑀘𑀼𑀝𑀭𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑀻𑀬𑀸𑀓𑀺 𑀦𑀻𑀭𑀼 𑀫𑀸𑀓𑀺𑀧𑁆
𑀧𑀼𑀯𑀷𑀸𑀓𑀺𑀧𑁆 𑀧𑀼𑀯𑀷𑀗𑁆𑀓 𑀴𑀷𑁃𑀢𑁆𑀢𑀼 𑀫𑀸𑀓𑀺𑀧𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀸𑀓𑀺 𑀫𑀡𑀺𑀬𑀸𑀓𑀺 𑀫𑀼𑀢𑁆𑀢𑀼 𑀫𑀸𑀓𑀺𑀧𑁆
𑀧𑀯𑀷𑀸𑀓𑀺𑀧𑁆 𑀧𑀯𑀷𑀗𑁆𑀓 𑀴𑀷𑁃𑀢𑁆𑀢𑀼 𑀫𑀸𑀓𑀺𑀧𑁆
𑀧𑀘𑀼𑀯𑁂𑀶𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑀺𑀯𑀸𑀷𑁄𑀭𑁆 𑀧𑀯𑀷𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀢𑀯𑀷𑀸𑀬 𑀢𑀮𑁃𑀬𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀸𑀭𑀸𑀢𑁂 𑀘𑀸𑀮𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
×

গ্রন্থ লিপি / கிரந்தம்

Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সিৱন়াহিত্ তিসৈমুহন়ায্ত্ তিরুমা লাহিচ্
সেৰ়ুঞ্জুডরায্ত্ তীযাহি নীরু মাহিপ্
পুৱন়াহিপ্ পুৱন়ঙ্গ ৰন়ৈত্তু মাহিপ্
পোন়্‌ন়াহি মণিযাহি মুত্তু মাহিপ্
পৱন়াহিপ্ পৱন়ঙ্গ ৰন়ৈত্তু মাহিপ্
পসুৱের়িত্ তিরিৱান়োর্ পৱন়ায্ নিণ্ড্র
তৱন়ায তলৈযালঙ্ কাডন়্‌ তন়্‌ন়ৈচ্
সারাদে সালনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
×

வட்டெழுத்து

Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்
பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
×

Reformed Script / சீர்மை எழுத்து

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்
பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
×

देवनागरी / தேவநாகரிு

सिवऩाहित् तिसैमुहऩाय्त् तिरुमा लाहिच्
सॆऴुञ्जुडराय्त् तीयाहि नीरु माहिप्
पुवऩाहिप् पुवऩङ्ग ळऩैत्तु माहिप्
पॊऩ्ऩाहि मणियाहि मुत्तु माहिप्
पवऩाहिप् पवऩङ्ग ळऩैत्तु माहिप्
पसुवेऱित् तिरिवाऩोर् पवऩाय् निण्ड्र
तवऩाय तलैयालङ् काडऩ् तऩ्ऩैच्
सारादे सालनाळ् पोक्कि ऩेऩे
Open the Devanagari Section in a New Tab
×

ಕನ್ನಡ / கன்னடம்

ಸಿವನಾಹಿತ್ ತಿಸೈಮುಹನಾಯ್ತ್ ತಿರುಮಾ ಲಾಹಿಚ್
ಸೆೞುಂಜುಡರಾಯ್ತ್ ತೀಯಾಹಿ ನೀರು ಮಾಹಿಪ್
ಪುವನಾಹಿಪ್ ಪುವನಂಗ ಳನೈತ್ತು ಮಾಹಿಪ್
ಪೊನ್ನಾಹಿ ಮಣಿಯಾಹಿ ಮುತ್ತು ಮಾಹಿಪ್
ಪವನಾಹಿಪ್ ಪವನಂಗ ಳನೈತ್ತು ಮಾಹಿಪ್
ಪಸುವೇಱಿತ್ ತಿರಿವಾನೋರ್ ಪವನಾಯ್ ನಿಂಡ್ರ
ತವನಾಯ ತಲೈಯಾಲಙ್ ಕಾಡನ್ ತನ್ನೈಚ್
ಸಾರಾದೇ ಸಾಲನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ
Open the Kannada Section in a New Tab
×

తెలుగు / தெலுங்கு

సివనాహిత్ తిసైముహనాయ్త్ తిరుమా లాహిచ్
సెళుంజుడరాయ్త్ తీయాహి నీరు మాహిప్
పువనాహిప్ పువనంగ ళనైత్తు మాహిప్
పొన్నాహి మణియాహి ముత్తు మాహిప్
పవనాహిప్ పవనంగ ళనైత్తు మాహిప్
పసువేఱిత్ తిరివానోర్ పవనాయ్ నిండ్ర
తవనాయ తలైయాలఙ్ కాడన్ తన్నైచ్
సారాదే సాలనాళ్ పోక్కి నేనే
Open the Telugu Section in a New Tab
×

සිංහල / சிங்களம்

Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සිවනාහිත් තිසෛමුහනාය්ත් තිරුමා ලාහිච්
සෙළුඥ්ජුඩරාය්ත් තීයාහි නීරු මාහිප්
පුවනාහිප් පුවනංග ළනෛත්තු මාහිප්
පොන්නාහි මණියාහි මුත්තු මාහිප්
පවනාහිප් පවනංග ළනෛත්තු මාහිප්
පසුවේරිත් තිරිවානෝර් පවනාය් නින්‍ර
තවනාය තලෛයාලඞ් කාඩන් තන්නෛච්
සාරාදේ සාලනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
×

മലയാളം / மலையாளம்

ചിവനാകിത് തിചൈമുകനായ്ത് തിരുമാ ലാകിച്
ചെഴുഞ്ചുടരായ്ത് തീയാകി നീരു മാകിപ്
പുവനാകിപ് പുവനങ്ക ളനൈത്തു മാകിപ്
പൊന്‍നാകി മണിയാകി മുത്തു മാകിപ്
പവനാകിപ് പവനങ്ക ളനൈത്തു മാകിപ്
പചുവേറിത് തിരിവാനോര്‍ പവനായ് നിന്‍റ
തവനായ തലൈയാലങ് കാടന്‍ തന്‍നൈച്
ചാരാതേ ചാലനാള്‍ പോക്കി നേനേ
Open the Malayalam Section in a New Tab
×

ภาษาไทย / சீயம்

จิวะณากิถ ถิจายมุกะณายถ ถิรุมา ลากิจ
เจะฬุญจุดะรายถ ถียากิ นีรุ มากิป
ปุวะณากิป ปุวะณะงกะ ละณายถถุ มากิป
โปะณณากิ มะณิยากิ มุถถุ มากิป
ปะวะณากิป ปะวะณะงกะ ละณายถถุ มากิป
ปะจุเวริถ ถิริวาโณร ปะวะณาย นิณระ
ถะวะณายะ ถะลายยาละง กาดะณ ถะณณายจ
จาราเถ จาละนาล โปกกิ เณเณ
Open the Thai Section in a New Tab
×

မ္ရန္‌မာစာ / பர்மியம்

Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စိဝနာကိထ္ ထိစဲမုကနာယ္ထ္ ထိရုမာ လာကိစ္
ေစ့လုည္စုတရာယ္ထ္ ထီယာကိ နီရု မာကိပ္
ပုဝနာကိပ္ ပုဝနင္က လနဲထ္ထု မာကိပ္
ေပာ့န္နာကိ မနိယာကိ မုထ္ထု မာကိပ္
ပဝနာကိပ္ ပဝနင္က လနဲထ္ထု မာကိပ္
ပစုေဝရိထ္ ထိရိဝာေနာရ္ ပဝနာယ္ နိန္ရ
ထဝနာယ ထလဲယာလင္ ကာတန္ ထန္နဲစ္
စာရာေထ စာလနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
×

かたかな / யப்பான்

チヴァナーキタ・ ティサイムカナーヤ・タ・ ティルマー ラーキシ・
セルニ・チュタラーヤ・タ・ ティーヤーキ ニール マーキピ・
プヴァナーキピ・ プヴァナニ・カ ラニイタ・トゥ マーキピ・
ポニ・ナーキ マニヤーキ ムタ・トゥ マーキピ・
パヴァナーキピ・ パヴァナニ・カ ラニイタ・トゥ マーキピ・
パチュヴェーリタ・ ティリヴァーノーリ・ パヴァナーヤ・ ニニ・ラ
タヴァナーヤ タリイヤーラニ・ カータニ・ タニ・ニイシ・
チャラーテー チャラナーリ・ ポーク・キ ネーネー
Open the Japanese Section in a New Tab
×

Chinese Pinyin / சீனம் பின்யின்

sifanahid disaimuhanayd diruma lahid
selundudarayd diyahi niru mahib
bufanahib bufanangga lanaiddu mahib
bonnahi maniyahi muddu mahib
bafanahib bafanangga lanaiddu mahib
basuferid dirifanor bafanay nindra
dafanaya dalaiyalang gadan dannaid
sarade salanal boggi nene
Open the Pinyin Section in a New Tab
×

عربي / அரபி

سِوَناحِتْ تِسَيْمُحَنایْتْ تِرُما لاحِتشْ
سيَظُنعْجُدَرایْتْ تِيیاحِ نِيرُ ماحِبْ
بُوَناحِبْ بُوَنَنغْغَ ضَنَيْتُّ ماحِبْ
بُونّْاحِ مَنِیاحِ مُتُّ ماحِبْ
بَوَناحِبْ بَوَنَنغْغَ ضَنَيْتُّ ماحِبْ
بَسُوٕۤرِتْ تِرِوَانُوۤرْ بَوَنایْ نِنْدْرَ
تَوَنایَ تَلَيْیالَنغْ كادَنْ تَنَّْيْتشْ
ساراديَۤ سالَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
×

International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு

×

Diacritic Roman / உரோமன்

civaṉākit ticaimukaṉāyt tirumā lākic
ceḻuñcuṭarāyt tīyāki nīru mākip
puvaṉākip puvaṉaṅka ḷaṉaittu mākip
poṉṉāki maṇiyāki muttu mākip
pavaṉākip pavaṉaṅka ḷaṉaittu mākip
pacuvēṟit tirivāṉōr pavaṉāy niṉṟa
tavaṉāya talaiyālaṅ kāṭaṉ taṉṉaic
cārātē cālanāḷ pōkki ṉēṉē
Open the Diacritic Section in a New Tab
×

Русский / உருசியன்

сывaнаакыт тысaымюканаайт тырюмаа лаакыч
сэлзюгнсютaраайт тияaкы нирю маакып
пювaнаакып пювaнaнгка лaнaыттю маакып
поннаакы мaныяaкы мюттю маакып
пaвaнаакып пaвaнaнгка лaнaыттю маакып
пaсювэaрыт тырывааноор пaвaнаай нынрa
тaвaнаая тaлaыяaлaнг кaтaн тaннaыч
сaaраатэa сaaлaнаал пооккы нэaнэa
Open the Russian Section in a New Tab
×

German/ யேர்மன்

ziwanahkith thizämukanahjth thi'rumah lahkich
zeshungzuda'rahjth thihjahki :nih'ru mahkip
puwanahkip puwanangka 'lanäththu mahkip
ponnahki ma'nijahki muththu mahkip
pawanahkip pawanangka 'lanäththu mahkip
pazuwehrith thi'riwahnoh'r pawanahj :ninra
thawanahja thaläjahlang kahdan thannäch
zah'rahtheh zahla:nah'l pohkki nehneh
Open the German Section in a New Tab
×

French / பிரெஞ்சு

çivanaakith thiçâimòkanaaiyth thiròmaa laakiçh
çèlzògnçòdaraaiyth thiiyaaki niirò maakip
pòvanaakip pòvanangka lhanâiththò maakip
ponnaaki manhiyaaki mòththò maakip
pavanaakip pavanangka lhanâiththò maakip
paçòvèèrhith thirivaanoor pavanaaiy ninrha
thavanaaya thalâiyaalang kaadan thannâiçh
çharaathèè çhalanaalh pookki nèènèè
×

Italian / இத்தாலியன்

ceivanaaciith thiceaimucanaayiith thirumaa laacic
celzuignsutaraayiith thiiiyaaci niiru maacip
puvanaacip puvanangca lhanaiiththu maacip
ponnaaci manhiiyaaci muiththu maacip
pavanaacip pavanangca lhanaiiththu maacip
pasuveerhiith thirivanoor pavanaayi ninrha
thavanaaya thalaiiyaalang caatan thannaic
saaraathee saalanaalh pooicci neenee
×

Afrikaans / Creole / Swahili / Malay / BashaIndonesia / Pidgin / English

sivanaakith thisaimukanaayth thirumaa laakich
sezhunjsudaraayth theeyaaki :neeru maakip
puvanaakip puvanangka 'lanaiththu maakip
ponnaaki ma'niyaaki muththu maakip
pavanaakip pavanangka 'lanaiththu maakip
pasuvae'rith thirivaanoar pavanaay :nin'ra
thavanaaya thalaiyaalang kaadan thannaich
saaraathae saala:naa'l poakki naenae
Open the English Section in a New Tab
×

Assamese / அசாமியம்

চিৱনাকিত্ তিচৈমুকনায়্ত্ তিৰুমা লাকিচ্
চেলুঞ্চুতৰায়্ত্ তীয়াকি ণীৰু মাকিপ্
পুৱনাকিপ্ পুৱনঙক লনৈত্তু মাকিপ্
পোন্নাকি মণায়াকি মুত্তু মাকিপ্
পৱনাকিপ্ পৱনঙক লনৈত্তু মাকিপ্
পচুৱেৰিত্ তিৰিৱানোৰ্ পৱনায়্ ণিন্ৰ
তৱনায় তলৈয়ালঙ কাতন্ তন্নৈচ্
চাৰাতে চালণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.