பலப்பலவிருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும், இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும், மேம்பட்ட கயிலை மலையையும், நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.
குறிப்புரை:
பலபல காமத்தர் - ` ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல ` ` எண்பது கோடி நினைந்து எண்ணுவன ` எனத் திருக்குறளிலும், மூதுரையிலும் உரைத்தவாறு காண்க. எண்ணியவாறே எண்ணங்களை இடையூறு நீக்கி ஈடேற்றும் கணபதியை வழிபட்டுக் கேட்கும் வரங்களைப் பலபல காமம் என்றருளினார். கலமலக்கிடுதல் - கலந்து பிறழச் செய்தல். நினைத்த வரங்களை எல்லாம் நல்க, அவை ஒன்றொடு ஒன்று கலந்து, பெற்ற முறையில் அன்றிப் பிறழ்ந்து பயன் கொடுக்கின்றமை பற்றிக் கலந்து பிறழ்தலாம்.
மலக்கிடுதல் - மலங்கச் செய்தல். மலங்க - கெட ; சுழல ; பிறழ. ( சிந்தாமணி ) கல என்னும் முதனிலை ஈண்டு எச்சப் பொருட்டாய் நின்றது. ( இலக்கணக் கொத்துரை ) கலக்கி மலக்கிட்டு, தி.4 ப.1 பா.8 பார்க்க. கணபதி யென்னும் களிறும் உடையார் - ` தனது அடி வழிபடு மவர்இடர் கடி கணபதிவர அருளினன் ` ( தி.1 ப.123 பா.5). வலம் ஏந்து இரண்டு சுடர் - இருளை ஒழிக்கும் வலிமை தாங்கிய செய்யதும் வெளியதுமான இருகதிர். ஞாயிறும் திங்களும் கண்ணாக உடையார். வான் கயிலாய மலை - சிவலோகம். தூய்மை வெண்மை குறித்தது. நலம் - முழுகுவார் தம் கழுவாயில்லாத தீவினைகளையும் தீர்க்கும் நன்மை.
பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:
×
తెలుగు / தெலுங்க
పలుపలు కోర్కెలతో, వాటిని నెరవేర్చమని కోరితే తీర్చే శక్తిగల గణపతి అనే మగఏనుగును, సూర్యచంద్రుల వెలుగును మించే వెలుగులు చిమ్మే కైలాస శిఖరాన్ని, మంచి చేకూర్చే కెడిల్ తీర్థాన్ని గల అదిగై వీరట్టాన వెలసిన స్వామికి దాసులం మేం. అందువల్ల భయపడవలసింది, భయపడతగ్గది ఏదీ లేదు.
అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
समस्त इच्छाओं की पूर्ति करने वाले,
निर्मल प्रभु गणपति, गजवदन के पिता,
तेजोमय सूर्य, चन्द्रसम प्रभु,
कैलास पर्वत निवासी हैं।
वे श्रेयस् प्रदायक
केडिलम् नदी-तीर्थ में प्रतिष्ठित हैं।
हम उस महिमामय प्रभु के दास हैं।
इसलिए ऐसा कुछ नहीं जिससे आतंकित हों,
भविष्य में भी हमें कोई भयभीत नहीं करा सकता।
रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
×
संस्कृत / வடமொழி
Under construction. Contributions welcome.
×
German/ யேர்மன்
Under construction. Contributions welcome.
×
français / பிரஞ்சு
Under construction. Contributions welcome.
×
Burmese/ பர்மியம்
Under construction. Contributions welcome.
×
Assamese/ அசாமியம்
Under construction. Contributions welcome.
×
English / ஆங்கிலம்
the elephant faced god, Kaṇapati who wanders frightening in the minds of people who rise suffering intensely, having very many desires.
the two lights which have the strength to dispel darkness and the great mountain, Kayilāyam.
we are the kindred of the God who has Keṭilam having water which confers good on people who bathe on it.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)
International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு
×
Diacritic Roman / உரோமன்
palapala kāmatta rākip pataitteḻu vārmaṉat tuḷḷē kalamalak kiṭṭut tiriyuṅ kaṇapati yeṉṉuṅ kaḷiṟum valamēn tiraṇṭu cuṭarum vāṉkayi lāya malaiyum nalamār keṭilap puṉalu muṭaiyā roruvar tamarnām añcuvati yātoṉṟu millai añca varuvatu millai
Open the Diacritic Section in a New Tab
×
Русский / உருசியன்
пaлaпaлa кaмaттa раакып пaтaыттэлзю ваармaнaт тюллэa калaмaлaк кыттют тырыёнг канaпaты еннюнг калырюм вaлaмэaн тырaнтю сютaрюм ваанкайы лаая мaлaыём нaлaмаар кэтылaп пюнaлю мютaыяa рорювaр тaмaрнаам агнсювaты яaтонрю мыллaы агнсa вaрювaтю мыллaы
Open the Russian Section in a New Tab
×
German/ யேர்மன்
palapala kahmaththa 'rahkip pathäththeshu wah'rmanath thu'l'leh kalamalak kidduth thi'rijung ka'napathi jennung ka'lirum walameh:n thi'ra'ndu zuda'rum wahnkaji lahja maläjum :nalamah'r kedilap punalu mudäjah 'ro'ruwa'r thama'r:nahm angzuwathi jahthonru millä angza wa'ruwathu millä Open the German Section in a New Tab