மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
117 சீகாழி
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : கௌசிகம்

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
 

× 3117001பதிக வரலாறு :

திருநாவுக்கரசரொடு திருக்காழியில் வழிபட்டிருந்து, பிரியாத நண்பொடும் அவர் பலதலங்களைத் தரிசிக்கப் போந்த பின் செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களை அருளினார் சண்பைவேந்தர். அவற்றுள் ஒன்றாக வந்த சொற்சீர் மாலைமாற்று இத்திருப்பதிகம்.
பதிகக் குறிப்பு: மாலைமாற்று என்பது முதலிலிருந்து இறுதிவரை படித்தால் அமையும் பாடலே, இறுதியிலிருந்து முதல்வரை, படிப்பினும் அமைவது. அதைச்சிறுவர்கட்குக் குடகு, விகடகவி என்று கூறிக் காட்டுவர். சொல்லணியில், கூடசதுக்கம், கோமூத்திரி, சுழிகுளம், மாலை மாற்று இவைகளை மிறைக்கவி என்பர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள். மாதவச்சிவஞானயோகிகள் காஞ்சிப் புராணத்திலும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணப் புராணத்திலும் இவைபோன்ற கவிதைகளை யமைத்துள்ளனர்.
×

இக்கோயிலின் படம்

×

இக்கோயிலின் காணொலி

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 

பொழிப்புரை:

ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.

குறிப்புரை:

யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால். ஆமா - அதுபொருந்துமா? நீ - நீயே கடவுளென்றால். ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும். (ஏகான்மாவாதிகளை மறுத்தது.) மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே. (\\\\\\"எம்மிறை நல்வீணை வாசிக்குமே\\\\\\" என்பது அப்பர் திருவிருத்தம்) காமா - யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே. காண் - (தீயவும் நல்லவாம் சிவனைச் சேரின் என்பதை யாவரும்) காணுமாறு பூண்ட. நாகா - பாம்புகளை யுடையவனே. காணாகாமா - கை, கால் முதலிய அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே. (காமனை யுருவழித்தவனே.) சினைவினை முதன்மேல் நின்றது. காழீயா - சீகாழிப்பதியில் எழுந்தருளியிருப்பவனே. மாமாயா - இலக்குமிக்குக் கணவனான திருமாலாகவும் வருபவனே (நான்க னுருபும்பயனும் தொக்க தொகை) \\\\\\"நாரணன்காண் நான்முகன்காண்\\\\\\" என்பது திருத்தாண்டகம். மா - கரியதாகிய. மாயா - மாயைமுதலிய மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக. மலம்கரியதென்பதை \\\\\\"ஒருபொருளுங் காட்டாது இருளுருவம் காட்டும், இரு பொருளும் காட்டாதிது\\\\\\" என்னும் திருவருட்பயனாலறிக. (இருண்மலநிலை. 3) மாயா - வடசொல், உபலட்சணம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

×

తెలుగు / தெலுங்க

’ఆత్మలమైన మేము దైవముకు సమము’ అనినచో అది తగునా!? ’నీవే ఏకైక దైవమ’ అనినచో అది ముమ్మూర్తులా తగును!
పేరియాళ్ అనబడు వీణను వాయించువాడా! సకల జనులంతా ఇష్టపడదగు సౌందర్యమూర్తియే!
కీడుచేయువారుకూడ నీ చెంతకు అరుదెంచిన, మేలైనవారగుదరని తెలియజేయుటకు సర్పములను ధరించియుంటివే!
కాళ్ళు, చేతులు మున్నగు అవయవములు కనబడకుండునట్లు మన్మథుని భస్మమొనరించి, రూపములేనివానిగ చేసితివే!
శీర్కాళి అనబడు దివ్యస్థలమున వెలసి అనుగ్రహించుచుండువాడా! మాయాజనితమైన ఈ పాపకర్మలనుండి విముక్తునిజేయుము!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]

×

ಕನ್ನಡ / கன்னடம்

Under construction. Contributions welcome.

×

മലയാളം / மலையாளம்

Under construction. Contributions welcome.

×

චිඞංකළමං / சிங்களம்

‘ජීවාත්මය’-විඤ්ඥාණය- වන අපි‚ ‘පරාත්ම දෙවියන්’- පරමාර්ථ ධර්මය- වෙම්දෝ? පරමාත්ම දහම ඔබයි! වීණාව වයනා සුරූපී දෙවිඳ‚ සතුරන් සැම ඔබ සමග එක්වන කල මිතුරු වන අසිරිය! මල්සරා විරූපී කර නයා පැළඳියනි‚ සිරිකත සැමි වෙණු ද ඔබමය! මායාව නෙරපන සීකාළි සමිඳුනි!-1

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2024

×

Malay / மலாய்

Under construction. Contributions welcome.

×

हिन्दी / இந்தி

Under construction. Contributions welcome.

×

संस्कृत / வடமொழி

Under construction. Contributions welcome.

×

German/ யேர்மன்

Under construction. Contributions welcome.

×

français / பிரஞ்சு

Under construction. Contributions welcome.

×

Burmese/ பர்மியம்

Under construction. Contributions welcome.

×

Assamese/ அசாமியம்

Under construction. Contributions welcome.

×

English / ஆங்கிலம்

Under construction.

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration :

×

𑀢𑀫𑀺𑀵𑀺 / தமிழி

Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀬𑀸𑀫𑀸𑀫𑀸𑀦𑀻 𑀬𑀸𑀫𑀸𑀫𑀸 𑀬𑀸𑀵𑀻𑀓𑀸𑀫𑀸 𑀓𑀸𑀡𑀸𑀓𑀸
𑀓𑀸𑀡𑀸𑀓𑀸𑀫𑀸 𑀓𑀸𑀵𑀻𑀬𑀸 𑀫𑀸𑀫𑀸𑀬𑀸𑀦𑀻 𑀫𑀸𑀫𑀸𑀬𑀸


Open the Thamizhi Section in a New Tab
×

গ্রন্থ লিপি / கிரந்தம்

Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

যামামানী যামামা যাৰ়ীহামা কাণাহা
কাণাহামা কাৰ়ীযা মামাযানী মামাযা


Open the Grantha Section in a New Tab
×

வட்டெழுத்து

Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா


Open the Thamizhi Section in a New Tab
×

Reformed Script / சீர்மை எழுத்து

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

Open the Reformed Script Section in a New Tab
×

देवनागरी / தேவநாகரிு

यामामानी यामामा याऴीहामा काणाहा
काणाहामा काऴीया मामायानी मामाया
Open the Devanagari Section in a New Tab
×

ಕನ್ನಡ / கன்னடம்

ಯಾಮಾಮಾನೀ ಯಾಮಾಮಾ ಯಾೞೀಹಾಮಾ ಕಾಣಾಹಾ
ಕಾಣಾಹಾಮಾ ಕಾೞೀಯಾ ಮಾಮಾಯಾನೀ ಮಾಮಾಯಾ
Open the Kannada Section in a New Tab
×

తెలుగు / தெலுங்கு

యామామానీ యామామా యాళీహామా కాణాహా
కాణాహామా కాళీయా మామాయానీ మామాయా
Open the Telugu Section in a New Tab
×

සිංහල / சிங்களம்

Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

යාමාමානී යාමාමා යාළීහාමා කාණාහා
කාණාහාමා කාළීයා මාමායානී මාමායා


Open the Sinhala Section in a New Tab
×

മലയാളം / மலையாளம்

യാമാമാനീ യാമാമാ യാഴീകാമാ കാണാകാ
കാണാകാമാ കാഴീയാ മാമായാനീ മാമായാ
Open the Malayalam Section in a New Tab
×

ภาษาไทย / சீயம்

ยามามานี ยามามา ยาฬีกามา กาณากา
กาณากามา กาฬียา มามายานี มามายา
Open the Thai Section in a New Tab
×

မ္ရန္‌မာစာ / பர்மியம்

Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ယာမာမာနီ ယာမာမာ ယာလီကာမာ ကာနာကာ
ကာနာကာမာ ကာလီယာ မာမာယာနီ မာမာယာ


Open the Burmese Section in a New Tab
×

かたかな / யப்பான்

ヤーマーマーニー ヤーマーマー ヤーリーカーマー カーナーカー
カーナーカーマー カーリーヤー マーマーヤーニー マーマーヤー
Open the Japanese Section in a New Tab
×

Chinese Pinyin / சீனம் பின்யின்

yamamani yamama yalihama ganaha
ganahama galiya mamayani mamaya
Open the Pinyin Section in a New Tab
×

عربي / அரபி

یامامانِي یاماما یاظِيحاما كاناحا
كاناحاما كاظِيیا مامایانِي مامایا


Open the Arabic Section in a New Tab
×

International Phonetic Aalphabets / ஞால ஒலி நெடுங்கணக்கு

×

Diacritic Roman / உரோமன்

yāmāmānī yāmāmā yāḻīkāmā kāṇākā
kāṇākāmā kāḻīyā māmāyānī māmāyā
Open the Diacritic Section in a New Tab
×

Русский / உருசியன்

яaмаамаани яaмаамаа яaлзикaмаа кaнаакa
кaнаакaмаа кaлзияa маамааяaни маамааяa
Open the Russian Section in a New Tab
×

German/ யேர்மன்

jahmahmah:nih jahmahmah jahshihkahmah kah'nahkah
kah'nahkahmah kahshihjah mahmahjah:nih mahmahjah
Open the German Section in a New Tab
×

French / பிரெஞ்சு

yaamaamaanii yaamaamaa yaalziikaamaa kaanhaakaa
kaanhaakaamaa kaalziiyaa maamaayaanii maamaayaa
×

Italian / இத்தாலியன்

iyaamaamaanii iyaamaamaa iyaalziicaamaa caanhaacaa
caanhaacaamaa caalziiiyaa maamaaiyaanii maamaaiyaa
×

Afrikaans / Creole / Swahili / Malay / BashaIndonesia / Pidgin / English

yaamaamaa:nee yaamaamaa yaazheekaamaa kaa'naakaa
kaa'naakaamaa kaazheeyaa maamaayaa:nee maamaayaa
Open the English Section in a New Tab
×

Assamese / அசாமியம்

য়ামামাণী য়ামামা য়ালীকামা কানাকা
কানাকামা কালীয়া মামায়াণী মামায়া
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.