தொகை, பொ-ரை: தாம் செய்துவரும் பணிக்குத் தாழ்வு வராமல் காத்த அரிவாளையுடையாயனார்தம் அடியார்க்கும் அடியேன்.
வகை, பொ-ரை: சேறு நிறைந்த வயல் சூழ்ந்த கணமங்கலத்தில் தோன்றிய அரிவாட்டாயர், வள்ளலாகிய சிவபிரானுக்கு அமுது ஏந்தி வரும் பொழுது, அவை நில வெடிப்பில் சிந்திப்போக, `கங்கை சூடிய பெருமானே! நீவிர் இவற்றை அமுது செய்யாவிடில் என் தலையை அரிந்து தள்ளுதலே தகும்\' எனக் கூறி அரிவாளைக் கழுத்தில் பூட்டி அரிந்த கையினை உடையராவர்.