குடந்தைக்கீழ்க்கோட்டம் (திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பெரியநாச்சியார் உடனுறை நாகேசுவரர்


மரம்: வில்வம்
குளம்: மகாமகத் தீர்த்தம்

பதிகம்: சொன்மலிந்த -6 -75 திருநாவுக்கரசர்

முகவரி: கும்பகோணம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612001
தொபே. 0435 2430386

உம்பர் ஏறிய புகழ் கும்பகோணம் நகரின் நடுவில் இருக்கும் நாகேச்சுரக்கோயிலே, குடந்தைக்கீழ்க் கோட்டம் ஆகும்.

ஆதிசேடன், நாகேசுவரர் இவர்கள்வழிபட்டுப்பேறு எய்தினர். ஆண்டு தோறும் சித்திரைமாதம் 11, 12, 13, தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி இறைவரின் திருமேனியில்படுகின்றது. இக்கோயிலில் கங்கைக்கணபதியின் திருமேனி மிகமிக அழகு பொருந்தியது. இங்குக் கூத்தாடுந்தேவர் கோயில் மிக்க வேலைப்பாடு உடையது. இங்கு எழுந்தருளியிருக்கும் துர்க்கையம்மன் மிகச் சக்தி வாய்ந்தவர்.கல்வெட்டு:

இத் திருக்கோயிலில் சோழமன்னர்களில் முதற் பராந்தக சோழன், இரண்டாம் ஆதித்தகரிகாலன், உத்தமசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், சீர்மன்னு இருநான்கு திசையும் என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய இராஜகேசரிவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன், மூன்றாங் குலோத்துங்க சோழன் இவர்கள் காலங்களிலும், மகாமண்டலேசுவரன் கோனேரிதேவமகாராசன் காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

சோழர் கல்வெட்டுக்களில் இறைவர் திருக்குடமூக்கில் திருக்கீழ்க்கோட்டத்துப் பரமசுவாமி, திருக்கீழ்க்கோட்டத்துப் பட்டாரகர், திருக்கீழ்க்கோட்டத்துப் பெருமாள், திருக்கீழ்க்கோட்டத்து மகாதேவர் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர்.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி: திருக்குடமூக்கில் உடையார் திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயில் முதல் பிராகாரத்துக் கீழதை திருமாளிகையில், வேளூர் கிழவன் ஆழ்வான் திருப்புறம்பிய முடையானான செம்பியன் பல்லவரையன், திருப்பறம்பியத்து இறைவரை எழுந்தருளுவித்து நிவந்தம் அளித்துள்ளான்.

இதை உணர்த்தும் கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளி விஜயாபிஷகேமும் வீராபிஷகேமும் பண்ணி அருளின ஸ்ரீ திரிபுவன வீரதேவர்க்கு யாண்டு முப்பத்தஞ்சாவது உய்யக்கொண்டார் வளநாட்டு பாம்பூர்நாட்டுத் திருக்குடமூக்கில் திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயில் முதல் பிராகாரத்துக் கீழதை திருமாளிகையில் வேளூர் கிழவன் ஆழ்வான் திருப்புறம்பிய முடையா னான செம்பியன் பல்லவரையன் எழுந்தருளுவித்த உடையார் திருப்புறம்பிய முடையார்க்கு அமுதுபடிக்கு நாளொன்றுக்கு அரிசி நானாழியும் இவ்வரிசியால் வந்த அப்பமுதும், கறியமுதும், உப்பமுதும், மிளகமுதும், தயிரமுதும், நெய்யமுதும், அடைக் காயமுதுபாக்கும், இலையமுது மற்றும் திருமஞ்சனமும் திருப்பள்ளித் தாமமும், திருமேற்பூச்சும் உள்ளிட்ட விஞ்சனத்துக்கும் சிறுகாலைச் சந்தி விளக்கு இரண்டும் உச்சிச் சந்தி விளக்கு ஒன்றும் இரவைச் சந்தி விளக்கு நாலும், இச் சந்தி விளக்கு ஏழுக்கும் வேண்டுந் திருவிளக்கு எண்ணையும் இந்நாயனார் ஸ்ரீ பண்டாரத்து உடலிலே இத் திருப் புறம்பிய முடையார்க்குப் பூசகைக்கும் அமுதுபடிக்கும் விடக்கவ தாகவும், இப்படிவிடுமிடத்து முப்பத்தஞ்சாவது சித்திரைமாஸ முதல் நிவந்தக் கட்டாக விடக்கடவதாகவும், பூசிக்கும் நம்பிமார் சிவப் பிராமணர்..... சமைப்பார்க்கும் வேண்டும் நிவந்தத்துக்கு இக் கோயிலில் உடலிலே விட்டு இத்திருப்புறம்பியமுடையார் அமுது செய்தருளின சோறு நானாழியும் சோற்றடைப்பிலே கூட்டிக்கொள்ளக் கடவதாகவும், இப்படியால்வந்த நிவந்தக்கட்டுப் படியே சந்திராதித் தவல் விடக்கடவதாகவும், இதுக்கு உபயமாக உடையார் திருக் கீழ்க்கோட்டமுடையார்க்கு திருமகரதோரணம் பண்ணிச் சாத்துகைக்கு உபையமாக வேளூர் கிழவன் ஆழ்வான் திருப்புறம்பியமுடையானான செம்பியன் பல்லவரையன் முப்பத்தஞ்சாவது நாள் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின காசு பதினேழாயிரம் ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்கினமகைக்கு இவை கோயிற்கணக்கு இராமனூருடையான் மூலபருஷப் பரியனெழுத்து. இக் காசு பதினேழாயிரமும் சீபண்டாரத்துக்கு ஒடுக்கியமகை்கு தேவகன்மி உய்யக்ெகாண்டான் பட்டன் எழுத்து. இக்காசு பதினேழாயிரமும் கோயிலில் ஓடு.... .... .... .... ....

(குறிப்பு: இக்கல்வெட்டு இதுவரை வெளிவந்திலது. படித்து எழுதலாயிற்று.)

கூத்தாடும் திருஞானசம்பந்த ஈஸ்வரமுடையார்கோயில்:
இப்பெயருடைய கோயில் ஒன்று இக் கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் இருக்கின்றது. அதைக் கட்டியவர் கூத்தாடும் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் ஆவார். இக்கோயிலுக்குப் பழுது ஏற்படுங்கால் அதைப் புதுப்பிப்பதற்கும், இறைவர்க்கு அணிகலன்களுக்கும் ஆகக் கூத்தாடும் திருஞானசம்பந்தர் மடந்தைபாகர் நிவந்தம் ஏற்படுத்தியிருந்தார்.

மடந்தைபாக நாயனார் கோயில்:
இப்பெயருடைய கோயில் ஒன்று இக் கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் இருப்பதைத் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் 20 ஆம் இராச்சிய ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

செல்வபிரான் திருமேனி:
முதலாம் இராஜேந்திரசோழன் கல்வெட்டு ஸ்ரீ விமானத்தில் செல்வபிரான் திருமேனியைப்பற்றி குறிப்பிடுகிறது.

பொதுச்செய்திகள்:
குடமூக்கின் ஒரு பகுதியாகிய மேல் காவிரியில் 24 வேலியை திருக்குடமூக்குச் சபையார் அரசனிடமிருந்து அபிஷகே தட்சிணையாகப் பெற்றனர். அதில் இரண்டு மா நிலத்தை இங்கணாட்டுச் சிற்றிங்கண் சிற்றிங்கணுடையான் கோயில் மயிலையான பராந்தக மூவேந்தவேளானுக்குக் குடமூக்குச் சபையார் விற்றுக் கொடுத்தனர். அதை அவன் கீழ்க்கோட்டத்தில் பிரபாகரம் வக்காணிப்பார்க்குப் பட்டவிருத்தியாகக் கொடுத்துள்ளான். (வக்காணிப்பார் - விவரித்துரைப்பார், பட்டவிருத்தி - கல்வியில் வல்ல பிராமணர்களுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலம்.) முதற் பராந்தகசோழனின் 38 ஆம் ஆண்டுக் கல்வெட்டு, திருக்குடமூக்குச் சபையார் அரிசலூரில் நிலம் விற்றதைக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டு, பாண்டிப் படையையும் ஜலசயனம் என்னும் கோயிலையும் குறிப்பிடுகின்றது. மலைநாட்டு ெநடும்புறையூரிவிருந்த பூவன்கண்ணன் இக்கீழ்க்கோட்ட முடையார் கோயிலுக்கு விளக்குக்கு 25 கழஞ்சு பொன் கொடுத்துள்ளான். அபூர்விகளுக்கும் சிவயோகிகளுக்கும் உணவின் பொருட்டு நிவந்தங்கள் அளிக்கப்பெற்றிருந்தன. (அபூர்விகள் - தலயாத்திரை செய்யும் வதேம்வல்ல பிராமணர்.) உத்தமசோழர் மனைவியாரின் பெயர் வீரநாராயணியார் என்பதையும் ஒரு கல்வெட்டு குறிப்பிடு கின்றது.

இவ்வூரதை் தன்னகத்துக் ெகாண்டுள்ள நாடு:
கும்பகோணம் பழங்காலத்தில் திருக்குடமூக்கு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளது. 2இரண்டாம் ஆதித்த கரிகாலனின் 3 ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இக்குடமூக்கை, குடந்தை என்னும் மரூஉ மொழியால் குறிப்பிட்டுள்ளது. இக்குடமூக்கு பழங்காலத்தில் பாம்பூர் நாட்டிற்கு உட்பட்டிருந்தது. பின் முதலாம் இராஜராஜன் காலத்தில் உய்யக்கொண்டார் வளநாட்டுக்கு உட்பட்டதாயிற்று.

 
 
சிற்பி சிற்பி