குடந்தைக்காரோணம் (கும்பகோணம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரர்


மரம்: வில்வம்
குளம்: மகாமகத் தீர்த்தம்

பதிகம்: வாரார்கொங் (குடந்தை) -1 -72 திருஞானசம்பந்தர்

முகவரி: கும்பகோணம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612001
தொபே. 0435 2430349

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். பெரிய நகரம். மயிலாடுதுறை - திருச்சிராப்பள்ளி இரயில் வழியில் உள்ள இரயில் வண்டி நிலையம். அனைத்து நகரங்களிலிருந்தும் கும்பகோணம் வரப் பேருந்து வசதி உண்டு.

இத்தலம் தேவாரங்களில் குடமூக்கு என வழங்கப்பெறும். பஞ்சக்குரோசத் தலங்கள் சூழ்ந்தது. கங்கை யமுனை முதலிய ஒன்பது தீர்த்தங்களும் வந்து வழிபடும் பெருமையுடையது. பதினான்கு கோயில்களையும், பதினான்கு தீர்த்தங்களையும் உடையது. ஒன்பதாம் நூற்றாண்டுமுதல் சோழ அரசர்கள் இதனைத் தலைநகராகக் கொண்டனர். சோழர்கள் இருந்த இடமாகிய சோழமாளிகையும், இடிந்துபோன பழங்கோயில்களும் இதன் பழமைக்கு அறிகுறி யென்பர் பெர்கூசன் என்னும் அறிஞர் (Indian and Eastern Architecture 367 of 9).

ஏழாம் நூற்றாண்டில் மூலைக் கூற்றம் என வழங்கப்பட்டதென்பர் பர்னல்துரை. இத்தலத்தில் (குரு, சிம்மராசியில் பிரவேசிக்குங்காலமான) 12 வருஷத்திற்கு ஒருமுறை மகா மகதீர்த்தத்தில் தென்னிந்திய மக்கள் அனைவரும் நீராடுவர். இங்கேயுள்ள பாடல்பெற்ற சிவத்தலங்கள் திருக்குடமூக்கு, குடந்தைக் கீழ்க்கோட்டம், குடந்தைக் காரோணம் என்பன. குடமூக்கு கும்பேசுவர சுவாமிகோயில்; கீழ்க்கோட்டம் நாகேசுவரன் கோயில்; காரோணம் காசி விசுவநாதர்கோயில். இவையன்றிச் சோமேசம் முதலிய பல கோயில்கள் உள்ளன. இத்தலம் மூர்க்கநாயனார் வாழ்ந்த தலம்.

இறைவன் பெயர் கும்பேசர், அமுதகும்பேசர், ஆதிகும்பேசர், அம்மையின் பெயர் மங்களாம்பிகை. பிரமன், அகத்தியர், கிருத வீரியன், வீரவர்மன், இந்திரன், மாந்தாதா முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்றனர்.கல்வெட்டு:

இத்தலம் உய்யக்கொண்டான் வளநாட்டு வடகரையம்பூர் நாட்டுத் திருக்குடந்தை என வழங்கும்(S.I.256 of 1911,14 of 1980). கல்வெட்டுக்கள் பெரும் பாலும் நாகேச்சரமாகிய கீழ்க்கோட்டத்தைப்பற்றியனவே. குடமூக்கு என்னும் இத்தலத்தைப்பற்றியன அல்லவாதலின் அவை ஈண்டுத் தரப்படவில்லை.

 
 
சிற்பி சிற்பி