கானாட்டுமுள்ளூர் (திருக்கானாட்டுமுள்ளூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கானார்குழலி உடனுறை பதஞ்சலீசுவரர்


மரம்: வெள்ளெருக்கு
குளம்: சூரியபுட்கரணி

பதிகம்: வள்வாய -7 -40 சுந்தரர்

முகவரி: கானாட்டம்புலியூர் முட்டம் அஞ்சல்
ஆயங்குடி
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம், 608306
தொபே. 04144 208091

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் ஓமாம்புலியூர் என்னும் பாடல் பெற்ற தலத்துக்குக் கிழக்கே ஐந்து கி.மீ. தொலைவில் கொள்ளிடப் பேராற்றின் வட கரையில் இருக்கின்றது.

இத்தலத்து இறைவரின் திருப்பெயர் பதஞ்சலி நாதர் என்றிருப்பதால், இத்தலம் பதஞ்சலியால் பூசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து.

இத்தலத்துப் பதிகத்தில் பாராட்டப்படும் இயற்கைக் காட்சிகள் பன்முறையும் படித்து மகிழ்தற்குரியன.



கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1926 No. 513-516.)

இவ்வூர்க் கோயிலில் விக்கிரமசோழ தேவர், வீரராஜேந்திர தேவர், மூன்றாம் இராசேந்திர சோழர் இவர்கள் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களில் இவ்வூர், விருதராச பயங்கர வள நாட்டு, கீழ்க்காநாட்டு முள்ளூராகிய திருச்சிற்றம்பலச் சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. விருதராச பயங்கரன் என்பது முதற் குலோத்துங்க சோழனுடைய விருதுப் பெயர்களில் ஒன்று. இந்நாடு தெற்கே காவிரியிலிருந்து வடக்கே திருக்கெடிலம் வரையில் பரவியிருந்தது.

இளக் கண்டிரம் என்னும் ஊரிலுள்ள செந்தாமரைக் கண்ணன் பட்டனாகிய வளவன் பிரமாதிராயன், தட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு நாள்வழிபாட்டிற்கு நிலம் அளித்துள்ளான். திருச்சிற்றம்பலத்துச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இறைவர்க்குத் திருவமுதுக்கு நிலம் அளித்திருந்தனர் என்னும் செய்திகள் இக் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன.

 
 
சிற்பி சிற்பி