களர் (திருக்களர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு இளங்கொம்பன்னாள் உடனுறை களர்முளைநாதர்


மரம்: பாரிசாதம்
குளம்: துர்வாச தீர்த்தம்

பதிகம்: நீருளார்கயல் -2 -51 திருஞானசம்பந்தர்

முகவரி: திருக்களர் அஞ்சல்
திருவாரூர் மாவட்டம், 614720
தொபே. 04367 279374

களர் நிலத்தில் அமைந்த கோயிலை உடைய ஊராதலின் திருக்களர் என்னும் பெயர் எய்திற்று.

திருத்துறைப்பூண்டியிலிருந்து களப்பாள் செல்லப் பேருந்துகள் உள்ளன. இது காவிரிக்கு வடகரையிலுள்ள நூற்றைந் தாவது தலமாகும்.

இறைவரின் திருப்பெயர் களர்முளைநாதர்; அடைந்தார்க்கு அருள்நாதர். இறைவியாரின் திருப்பெயர் இளங்கொம்பன்னாள்.தலவிருட்சம் பாரிசாதம். தீர்த்தம் துர்வாசதீர்த்தம்.

துர்வாச முனிவர்க்கு இறைவர் திருக்கூத்துக் காட்டியருளினார். பராசரர் முதலிய முனிவர்களும் வழிபட்டுப் பேறு எய்தினர். இதற்குத் திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்று உள்ளது.

இதற்கு ஆதியப்பனாரால் எழுதப்பெற்ற புராணம் ஒன்று உண்டு. அஃது அச்சில் வெளிவந்துள்ளது.


கல்வெட்டு:

இவ்வூர்க் கல்வெட்டில், ``நம் தேவாரத்துக்குத் திருப்பதியம் பாடும் பெரியான்`` எனவந்துள்ள தொடரில், தேவாரத்துக்கு என்ற பொருளை நுணுகி ஆய்வது கற்றறிந்தார் கடமையாகும்.

இக்கோயிலில் பதினான்கு கல்வெட்டுக்கள்(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902, No. 642-655.Also see South Indian Inscriptions, Vol. 7 No. 247-260) படி எடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஐந்து செப்பேடுகள் கிடைத்திருக்கின்றன. அவைகளுள் சோழர்களது எட்டும், பாண்டியர்களது இரண்டும், விஜயநகரத்தாரது மூன்றுமாக உள்ளன. விளக்கு எரிப்பதற்கு பொன் தானம், வரிதானம், நிலதானம் ஆகியவைபற்றி அக்கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. செப்பேடுகளில் ஒன்று இராஜரா சோழனது பதினெட்டாம் (ஆட்சி) ஆண்டினது. மற்றொன்று அவனது முப்பத்தொன்றாம் ஆண்டினது. மூன்றாவது மூன்றாம் குலோத்துங்க சோழனது இருபத்தாறாம் (ஆட்சி) ஆண்டினது. மற்ற இரண்டும் குலோத்துங்கன் இருபத்தெட்டாம் ஆண்டினதும், இராஜராஜன் III பதினெட்டாம் ஆண்டினதுமாகும். இவை சென்னைக்கண்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் முளைத்த நாயனார், திருக்களர் உடையார், அடைந்தார்க்கு அருள்செய்த நாயனார் என்னும் திருப்பெயர்களால் கல்வெட்டுக்களில் கூறப்படுகின்றனர். இத்திருக்கோயில் திருமடைவிளாகத்துத் தெற்குத் திருவீதியில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் இடங்கைவிநாயகர் என்னும் பெயர் பெற்றிருந்தனர். இக்கோயில் கருப்ப இல்லுக்கு முன்புறத்துள்ள மண்டபத்தைச் செய்வித்தவர் சீறூருடையான் மறைதேடும் பொருள் பெரிய அம்பலக்கூத்தர். இச்செய்தி மாறவர்மன் குலசேகரதேவன் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. இக்கோயிலில் திருவாலவாயுடையாரை எழுந்தருளுவித்துப் பூசைக்கும் திருவமுது படிக்கும் உடலாகத் திருபுவனச் சக்கரவர்த்தியின் ஏழாம் ஆண்டில் நிவந்தம் அளித்தவர் நாகங்குடையார் மண்டை ஆழ்வார் ஆவர். இக்கோயிலில் கருணாகரன் திருமண்டபம் என்னும் பெயருடைய ஒரு மண்டபம் கூறப்பெற்றுள்ளது. ஊர்ச்சபையார் அதில் கூட்டம் கூடும் வழக்கம் குறிக்கப்பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் கீழைத்திருவாசல் தென்பக்கம் எழுந்தருளியிருக்கும் விநாயகர் மூவாயிர விநாயகப் பிள்ளையார் என்னும் பெயரால் அழைக்கப்பெற்றுள்ளனர்.

சுந்தரத்தோளுடையான் திருமண்டபம் என்னும் ஒரு மண்டபம் இருந்தது. அதிலும் ஊர்ச்சபையார் கூட்டம் கூடி நிர்வாகத்தை நடத்தியதாக ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது. வீரபூபதி உடையார் கல்வெட்டில் வைகாசித் திருவிழாவைப் பற்றிக் கூறப் பெற்றுள்ளது.

அக்காலத்தில் இக்கோயில் மாகேஸ்வரக் கண்காணியும் திருப்பதியக்காணியும் உடையவனாய் இருந்தவன் மறைதேடும் பொருளான் அகளப்பிரியன் ஆவான். இக்கல்வெட்டுக்களில் இவ்வூர் இராசேந்திரசோழவளநாட்டுப் புறங்கரம்பை நாட்டைச்சேர்ந்ததென்று குறிக்கப்பெற்றுள்ளது.

 
 
சிற்பி சிற்பி