கலயநல்லூர் (திருக்கலயநல்லூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு அமிர்தவல்லி உடனுறை அமிர்தகலாநாதர்


மரம்: வன்னி
குளம்: அமிர்த தீர்த்தம்

பதிகம்: குரும்பைமுலை -7 -16 சுந்தரர்

முகவரி: சாக்கோட்டை அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612401
தொபே. 9367721522

இவ்வூர் இக்காலம் சாக்கோட்டை என்று வழங்கப்படுகின்றது. கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம் போகும் பெருவழியில், கும்பகோணத்திலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென்கரையில் இருக்கின்றது.

உயிர்களை அடைத்த கும்பத்தின் கலயம் பிரளய வெள்ளத்தில் தங்கிய இடமாதலின் கலயநல்லூர் என்னும் பெயர் எய்திற்று என்பர். இங்குள்ள கோயில்கள் நான்கு பக்கங்களிலும் தாமரைப் பொய்கைகளால் சூழப்பட்டுள்ளது என்பதனை, ``தண்கமலப் பொய்கை புடைசூழ்ந்தழகார் தலத்தில்`` என்னும் இத்தலத்துத் தேவார அடியால் விளங்குகின்றது.

இக்காலம் கிழக்குப் பக்கத்துப் பொய்கை மக்களால் தூர்க்கப்பட்டுள்ளது. சுந்தர மூர்த்தி நாயனார் காலத்தில் அதாவது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இக்கோயில் பெருங்கோயில் அமைப்புடையதாய் இருந்தது. இச்செய்தி, ``தடங்கொள் பெருங்கோயில்தனில்`` என்னும் அவரது வாக்கால் புலனாகும். இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரை, பிரமதேவர் வழிபட்டுப் பேறு பெற்றனர்.

இச்செய்தி, `வண்கமலத்தயன் முன்னாள் வழிபாடு செய்ய மகிழ்ந்தருளியிருந்த பிரான்` என்னும் இத்தலத்துத் தேவாரப் பாடலின் அடியால் அறியக் கிடக்கின்றது.

இவ்வூர்க்குச் சுந்தரர் பாடிய பதிகம் ஒன்று. இப்பதிகத்தில் பழைய வரலாறுகளை அமைத்து இவர் பாடியுள்ளதைச் சேக்கிழார் பெருமான், `மெய்ம்மைப் புராணம் பலவுமிகச் சிறப்பித்திசையின் விளம்பினார்` எனப் பாராட்டியுள்ளார். இப்பதிகத்தில் இயற்கை வனப்புக்கள் எழில்பெற எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இந்த இயற்கை வனப்புக்களை, திரு.ந.மு. வேங்கடசாமி நாட்டார் அடிக்கடி எடுத்துப் பாராட்டிப் பேசுவதுண்டு.

(குறிப்பு:- இத்தலத்துக்குத் தென் கிழக்கே ஒரு மைல் தொலைவில் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடப்பட்ட திருக்கருக்குடி இருக்கின்றது. அவ்வூர் இக்காலம் மருதாந்த நல்லூர் என்று வழங்கப்படுகின்றது.)கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி