கடிக்குளம் (திருக்கடிக்குளம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை கற்பகநாதர்


மரம்: பலா மரம்
குளம்: கடிக்குளம், விநாயகதீர்த்தம்

பதிகம்: பொடிகொள் -2 -104 திருஞானசம்பந்தர்

முகவரி: கற்பகநாதர்குளம் அஞ்சல்
குன்னலூர்
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம், 614703
தொபே. 04369 240187

இது கற்பகநாதர்குளம் எனவும் வழங்கப்பெறும். கற்பக விநாயகர் சிவபெருமானைப் பூசித்து மாம்பழம் பெற்ற வரலாறு பற்றி இப்பெயர் எய்திற்று என்பர்.

திருத்துறைப்பூண்டி தொடர்வண்டி நிலையத்திற்குத் தென் மேற்கே 15 கி.மீ. தூரத்திலுள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியக்காடு செல்லும் பேருந்தில் கடிக்குளம் செல்லலாம்.

இறைவரது திருப்பெயர் கற்பகநாதர். இறைவியாரது திருப்பெயர் சௌந்தரநாயகி. தீர்த்தம் விநாயகதீர்த்தம். ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் ஒன்று இருக்கிறது. தற்போது இக்கோயில் திருப்பணிசெய்யப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. கரையங்காடு என்பது இவ்வூரைச் சார்ந்ததாகும். இங்கு இரண்டாயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கிருந்து மேற்கே ஒருகல்லில் இடும்பாவனம் என்ற கோயில் இருக்கிறது. இக்கோயிலின் பரப்பு 11-52 ஏக்கராகும். இதில் சிவாலயம், மற்றைய மூர்த்திகள், கற்பக விநாயகர் கோயில், திருக்குளம் முதலியன அமைந்துள்ளன.

ஐதீகப்படி கார்த்திகார்ச்சுனன் என்ற அசுரன் கற்பகலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தானாம். சுவாமிக்கும் விநாயகருக்கும் இடையில் கோதண்டராமன் சந்நிதி கட்டப்பட்டுள்ளது. தீர்த்தத்தின் பெயரே கடிக்குளம் என்பது. இக்கோயிலின் தலமரம் பலா. இக்கோயிலுக்குக் கரையங்காடு என்ற ஊர் தஞ்சை மன்னரால் தரப்பட்டது. இதற்கு இன்னும் பல கிராமங்களில் நிலங்கள் உண்டு.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி