ஊறல் (தக்கோலம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு உமையம்மை உடனுறை உமாபதீசுவரர்


மரம்: தக்கோலம்
குளம்: பார்வதி தீர்த்தம்

பதிகம்: மாறிலவுணர் -1 -106 திருஞானசம்பந்தர்

முகவரி: தக்கோலம் அஞ்சல்
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம், 631053
தொபே. 04177 248220

தொண்டை நாட்டுத்தலம். இத்தலம் தக்கோலம் என வழங்கப் பெறுகிறது. இரயில் நிலயம் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. நந்திதேவரது வாயினின்றும் நீர் சுரப்பதாலும், இறைவனது திருவடியினின்றும் நீர் சுரப்பதாலும் ஊறல் என்று வழங்குவதாயிற்று. சம்வர்த்தமுனிவர் பூசித்துப் பேறு பெற்றதலம். இக்கோயிலையடுத்து மதிலோரத்தின் கிழக்கே உள்ள கங்காதரர் சந்நிதியில் மேற்குப் பிராகாரத்தில் விருஷபவாயிலிருந்து அகோராத்ரம் தீர்த்தம் வருவது ஸ்தல மகிமையை விளக்கும். இறைவன் உமாபதீசுவரர், ஜல நாதேசுவரர். இறைவி உமையம்மை. தீர்த்தம் பார்வதி தீர்த்தம். விசயநகர அரசர்களால் நந்திதீர்த்தம் என்றழைக்கப்பட்டது. தக்கோலம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 1.5.கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.கல்வெட்டு:

கல்வெட்டில் ஜலநந்தீசுவரர் என்று வழங்கப்பெறும். இராஜகேசரிவர்மன் ஆட்சியில் கங்கமன்னன் பிருதிவிபதியால் வெள்ளிப்பாத்திரம் தானம் செய்யப்பட்டது (5 of 1197). அவன் மனைவி அருள் மொழிநங்கையால் கோதானம் செய்யப்பட்டது(7 of 1197). கோபார்த்திவேந்திரவர்மன் ஆட்சியில் துர்க்கைச்சிலைக்கு விளக்குக்கள் அளிக்கப்பட்டுள்ளன(14 of1197). திரிபுவனச்சக்ரவர்த்தி குலோத்துங்கன் ஆட்சியில் திருக்காளத்திதேவன் என்கிற யாதவனால் நிலம் தானம் செய்யப்பெற்றுள்ளது(16 of 1197). மற்றவை விளக்கிற்கும், மற்றச்செலவுகளுக்கும் பொன், பணம், நிலம், ஆடுகள், நெல் முதலியன வழங்கியதைத் தெரிவிக்கின்றன.

 
 
சிற்பி சிற்பி