இன்னம்பர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு கொந்தார் பூங்குழல் அம்மை உடனுறை எழுத்தறிநாதர்


மரம்: செண்பக மரம்
குளம்: ஐராவத தீர்த்தம்

பதிகம்: எண்டிசைக் -3.95 திருஞானசம்பந்தர்
விண்ணவர் -4.72 திருநாவுக்கரசர்
மன்னு மலைமகள் -4.100 திருநாவுக்கரசர்
என்னி லாரு -5.21 திருநாவுக்கரசர்
அல்லிமலர் -6.89 திருநாவுக்கரசர்

முகவரி: இன்னம்பர் அஞ்சல்
திருப்புறம்பயம்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612303
தொபே. 0435 2000157

இது, கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குச் செல்லும் பெருவழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரியின் வடகரைத் தலங்களுள் 45 ஆவது தலம்.

இறைவரின் திருப்பெயர்:-
(1) தான்தோன்றியீசர்
(2) எழுத்தறிந்த நாதர்.
இப்பெயர், அப்பர்பெருமானால் இவ்வூர்ப் பதிகத்தில் எடுத்து ஆளப் பெற்றுள்ளது. இறைவியின் திருப்பெயர் கொந்தார் பூங்குழல் அம்மை. ஞாயிறு, அகத்தியர், ஐராவதம் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். இப்பதிக்குத் திருஞான சம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் நான்கு என ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் சோழ மன்னரில் இராஜகேசரி வர்மரின் நான்காம் ஆண்டிலும், விசயநகரவேந்தரில் வீர கம்பண்ண உடையார் காலத்திலும் பொறிக்கப்பெற்ற இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றுள் சோழமன்னரின் கல்வெட்டு, அரிஞ்சிகை விண்ணகரம் என்னும் திருமால்கோயில் இன்னம்பரில் இருந்த தென்னவன் விழுப்பரையனுடைய மனைவி அரிஞ்சிகையால் ஐந்து அந்தணர்களுக்கு அன்னமளிக்க நிபந்தம் அளித்ததைக் கூறுகின்றன. வீரகம் பண்ண உடையார் கல்வெட்டு, (See the Annual Reports on South Indian Epigraphy for the year 1927. No. 321 -322.) துருக்கர் படையெடுப்பால் நாற்பது ஆண்டுகள் இக்கோயில் பூசையின்றிக் கிடந்ததையும் குறிப்பிடுகின்றது. மேற்குறித்த சோழர் கல்வெட்டு இவ்வூரை வடகரை இன்னம்பர் நாட்டு இன்னம்பர் என்று குறிப்பிடுகின்றது.

 
 
சிற்பி சிற்பி