இலம்பையங்கோட்டூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு கோடேந்து முலையம்மை உடனுறை சந்திரசேகரர்


மரம்: வில்வம்
குளம்: சந்திர தீர்த்தம்

பதிகம்: மலையினார் -1 -76 திருஞானசம்பந்தர்

முகவரி: கப்பாங்கோட்டூர் அஞ்சல்
திருப்பெரும்புதூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் 631553
தொபே. 044 27692412

தொண்டை நாட்டுத்தலம். கூவத்துக்குத் தென்மேற்கே 2 கி.மீ. தூரத்திலுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன.

இங்கு அரம்பையாதியர் பூசித்துப் பேறுபெற்றனர். அரம் பையங்கோட்டூர் என்பது இலம்பையங்கோட்டூர் என மருவியது. இறைவன் சந்திரசேகரர். இறைவி கோடேந்து முலையம்மை. தீர்த்தம் சந்திர தீர்த்தம். இத்தலம் திருவிற்கோலத்தினின்றும் தென்மேற்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.கல்வெட்டு:

பாண்டியன் கோநேரின்மை கொண்டான் திரிபுவனச் சக்ரவர்த்தி ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் மணவிற்கோட்டத்தின் பகுதியான கான்றூர் நாட்டிலுள்ள இலம்பையங்கோட்டூர் என வழங்கப்பெறும்(232 of 1910), திரிபுவனச் சக்கரவர்த்தி திரிபுவன வீரதேவனது ஆட்சியில் கான்றூர் நாட்டிலுள்ள சதுர்வேதிமங்கலம் இலம்பையங் கோட்டூர் எனவும் வழங்கப் பெறும்( 234 of 1910). இறைவன் பெயர் இலம்பையங் கோட்டூர் உடையநாயனார் என்பது(234 of 1910).

இராஜாதிராஜதேவன் காலத்தில், தேவநாயகசுவாமிகோயில், சிவபாதசேகர மூவேந்தவேளானால் கட்டப்பட்டுள்ளது(231 of 1910). ஏனையவை விளக்கிற்கு நெல், பொன், ஆடுகள், நிலங்கள் முதலியன தானங் கொடுக்கப்பட்டதை அறிவிக்கின்றன.

 
 
சிற்பி சிற்பி