அஞ்சைக்களம் (திருவஞ்சைக்களம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு உமையம்மை உடனுறை அஞ்சைக்களத்து அப்பர்

குளம்: சிவகங்கை

பதிகம்: தலைக்குத்தலை -7 -4 -சுந்தரர்

முகவரி: வாஞ்சிகுளம் அஞ்சல்,
கொடுங்கநல்லூர்,
திருச்சூர் மாவட்டம்,
கேரளம் 680664
தொபே. 0487 2331124.

கொச்சி இருப்புப் பாதையில், ஷோரனூர் சந்திப்பிலிருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் உள்ள, திருச்சூர் என்னும் தொடர் வண்டி நிலையத்தில் இறங்கி, கொடுங்கோளூர் சென்று, அங்கிருந்து இரண்டு கி.மீ. தூரம் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். பேருந்துகளிலும் செல்லலாம்.

சைவமும் தமிழும் தழைக்கத் தோன்றிய அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் நாயனார் என்னும் பெருமாக் கோதையார் திருஅவதாரஞ் செய்தருளிய பதி. பரசுராமர் தம் தாயைக் கொன்றதோஷம் நீங்கப் பூசித்த தலம். இத்தலத்திலிருந்துதான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானையின் மீதும், சேரமான் பெருமாள் நாயனார் குதிரையின் மீதும் திருக் கயிலாயத்துக்கு எழுந்தருளினார்கள். இந்த அஞ்சைக்களம் சேர நாட்டில் சேர மன்னர்களது இராசதானியாகிய மகோதையில், உள்ள திருக்கோயில். `கடலங்கரை மேல் மகோதையணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே` என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவாக்கு (மகோதை என்பது கொடுங்கோளுர்).

இத்திருவஞ்சைக்களத்துக்கு வடக்கே கொடுங்கோளூரும், தெற்கே கோட்டைப் புறமும், மேற்கே மேற்றலையும், கிழக்கே புல்லூற்றும் இருக்கின்றன. கொடுங்கோளூரில் பகவதி அம்மன் கோயில் இருக்கின்றது. இதனையே கண்ணகி கோயில் என்பர். அஞ்சைக்களத்து அப்பர் கோயில் மலையாள முறையில் கட்டப்பட்டுள்ளது.


கல்வெட்டு:

இக்கோயிலிலிருந்து அரசியலார் ஒரே கல்வெட்டை வெளியிட்டிருக்கின்றனர். அது மிகவும் சிதைந்து விட்ட படியால் அதன் கருத்தை அறிந்து கொள்ளமுடியவில்லை. அக் கல்வெட்டின் மூலம் கல்வெட்டுத் துறையாளர் வெளியிட்டவாறு கொடுக்கப் பட்டுள்ளது. (A.R.E.1895 No. 225; and S. I. I. Vol. 789.)

(1) ஸ்ரீ தநுவில் வியாழந் நில்க்க செய்த ......வது திருவஞ்சக்களத்து இராயிங்ஙப் பெருந்தச்சனுக்

(2) ......பெருந்தச்சனு அமச்சுள்ளுறுத்திக் கோயிலதிகாரிகள் திருவுள்ளஞ் செய்து கொடுத்தருளிய புரையடத்தின் இறை முப்பதிஞாழி

(3) ......செல்வாரே கொடுக்க கடவியார் இப்புரையடத்தில்ச் சென்று புக்கு விலக்குமவனு பொருள்க்கவிருமவனு அய்ம்பத்திருகழஞ்ஞு பொன்

(4) ......யிடு ஒள்ளொருத்தன் புகில் இடையிடும் விடக்கட

(5) ......திருவஞ்சக்(கள)

 
 
சிற்பி சிற்பி