வைகன்மாடக்கோயில்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு கொம்பியல்கோதை உடனுறை வைகல்நாதேசுவரர்


மரம்: செண்பகம்
குளம்: செண்பக தீர்த்தம்

பதிகம்: துளமதி -3 -18 திருஞானசம்பந்தர்

முகவரி: வைகல் மேலையூர் அஞ்சல்
ஆடுதுறை தஞ்சாவூர் மாவட்டம், 612101
தொபே. 0435 2465616

வைகல் என்னும் ஊரில் மாடக்கோயில் அமைப்பில் அமைந்த காரணத்தால் இப்பெயர் பெற்றுள்ளது. இக்கோயில் ஊரின் மேல் பக்கத்தில் இருக்கிறது. இது கோச்செங்கட்சோழனால் கட்டப்பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்தது. இச்செய்தி ``வையகம் மகிழ்தர வைகன் மேற்றிசைச், செய்யகண் வளவன் முன்செய்த கோயிலே`` என்னும் இத்தலத்து ஞானசம்பந்தர் பதிகத்து இரண்டாம் பாடலின் அடிகளால் விளங்குகின்றது.

இது மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் ஆடுதுறை தொடர் வண்டி நிலையத்திற்குத் தெற்கே 5 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரித் தென்கரைத் தலங்களுள் இது முப்பத்து மூன்றாவது ஆகும். இறைவரின் திருப்பெயர் வைகல்நாதேசுவரர். இறைவியின் திருப்பெயர் கொம்பியல்கோதை. இதற்கு ஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று இருக்கின்றது.கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி