வேட்களம் (திருவேட்களம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு நல்லநாயகி உடனுறை பாசுபதேசுவரர்


மரம்: மூங்கில்
குளம்: நள தீர்த்தம்

பதிகங்கள்: அந்தமுமாதியுமாகிய -1 -39 திருஞானசம்பந்தர்
நன்றுநாடொ -5 -42 திருநாவுக்கரசர்

முகவரி: அண்ணாமலை நகர் அஞ்சல்
சிதம்பரம்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம், 608002
தொபே. 04144 238274

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். சிதம்பரத்துக்கு கிழக்கே 2 கி.மீ. தூரத்திலுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ்பால் உள்ளது. சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இத்தலம் மூங்கில்வனம் எனவும் கூறப்பெறும். அர்ச்சுனனுக்குப் பாசுபதம் கொடுத்த தலம். பாசுபதாஸ்திரம் ஏந்திய இறைவன் திருவுருவமும், அர்ச்சுனன் தவநிலையைக் காட்டும் திருவுருவமும் இருக்கின்றன. இறைவன் வேடனாகவந்து அர்ச்சுனனுக்கு அருள் வழங்கினார் என்பது வரலாறு. இதனை `வேடனார் உறைவேட்களம்` என்ற அப்பர் வாக்கும் நன்கு விளக்கும்.

இறைவன் பெயர் பாசுபதேசுவரர், இறைவியின் பெயர் நல்லநாயகி. கோயிலுக்கெதிரில் தீர்த்தம் உண்டு. புதிய திருப்பணி. திருஞானசம்பந்த சுவாமிகள் சிதம்பரத்தில் இருப்பதற்கு அஞ்சி, இத்தலத்திலேயே தங்கிச் சிதம்பரத்தைத் தரிசித்தார் என்பது பெரிய புராண வரலாறு.கல்வெட்டு:

சகம் 1488-ல் (கி.பி. 1556-ல்) சிதம்பரேசுவர சிவகாமி கோயிலுக்குத் திருவேட்களங் கிராமத்தை அச்சுதப்பநாயக்கர் அளித்த வரலாறு அறியப்படுகிறது.(259 of 1913)

 
 
சிற்பி சிற்பி