வெண்டுறை (திருவெண்டுறை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு வேல்நெடுங்கண்ணி உடனுறை வெண்டுறைநாதர்


மரம்: வில்வம்
குளம்: காவிரி, பிரமபுரீச தீர்த்தம்

பதிகம்: ஆதியனாதிரை -3 -61 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவண்டுறை அஞ்சல்
ஆதிச்சபுரம்
மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம், 614717
தொபே. 04367 294640

இக்காலம் வண்டுறை என்று வழங்கப்பெறுகின்றது. இது நாகை காயிதே மில்லத் மாவட்டம் மன்னார்குடி தொடர் வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 10 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. காவிரித் தென்கரைத் தலங்களுள் நூற்றுப்பன்னிரண்டாவது ஆகும். மன்னார் குடியிலிருந்து இவ்வூர் செல்லப் பேருந்துகள் உள்ளன.

இறைவரின் திருப்பெயர் வெண்டுறைநாதர். இப்பெயர் இவ்வூர்ப் பதிகத்தின் இரண்டாம் பாடலில் குறிக்கப்பெற்றுள்ளது. இறைவியின் திருப்பெயர் வேல்நெடுங்கண்ணி. பிருங்கி என்னும் முனிவர் வண்டு உருவெடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே துளைத்துச் சென்று இறைவனை மாத்திரம் வழிபட்ட பதி இதுவென்றும், கர்ப்பஇல்லின் உள்பக்கத்தில் வண்டின் ஒலி இன்றும் கேட்கின்றது என்றும் கூறுவர். இத்தலத்தை வித்யாதரரும் பூசித்தனர். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.
கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி