வீழிமிழலை
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு சுந்தரகுசாம்பிகை உடனுறை விழியழகர்


மரம்: விழிச்செடி
குளம்: விஷ்ணு தீர்த்தம்

பதிகங்கள்: சடையார்புன லுடையானொரு 01.011 திருஞானசம்பந்தர்
மைம்மரு பூங்குழற் கற்றைதுற்ற 01.004 திருஞானசம்பந்தர்
தடநில வியமலை 01.020 திருஞானசம்பந்தர்
அரையார் விரிகோ 01.035 திருஞானசம்பந்தர்
இரும்பொன் மலைவில்லா 01.082 திருஞானசம்பந்தர்
வாசி தீரவே 01.092 திருஞானசம்பந்தர்
அலர்மகண் மலிதர 01.124 திருஞானசம்பந்தர்
ஏரிசையும் வடவாலின் 01.132 திருஞானசம்பந்தர்
கேள்வியர் நாடொறு 03.009 திருஞானசம்பந்தர்
சீர்மருவு தேசினொடு 03.080 திருஞானசம்பந்தர்
மட்டொளி விரிதரு 03.085 திருஞானசம்பந்தர்
வெண்மதி தவழ்மதிள் 03.098 திருஞானசம்பந்தர்
வேலினேர்தரு கண்ணினாளுமை 03.111 திருஞானசம்பந்தர்
துன்றுகொன்றைநஞ் சடையதே 03.116 திருஞானசம்பந்தர்
புள்ளித்தோ லாடை 03.119 திருஞானசம்பந்தர்
பூதத்தின் படையர் 04.064 திருநாவுக்கரசர்
வான்சொட்டச் சொட்டநின் 04.095 திருநாவுக்கரசர்
கரைந்து கைதொழு 05.012 திருநாவுக்கரசர்
என்பொ னேயிமை 05.013 திருநாவுக்கரசர்
போரானை ஈருரிவைப் 06.050 திருநாவுக்கரசர்
கயிலாய மலையுள்ளார் 06.051 திருநாவுக்கரசர்
கண்ணவன்காண் கண்ணொளிசேர் 06.052 திருநாவுக்கரசர்
மானேறு கரமுடைய 06.053 திருநாவுக்கரசர்
நம்பி னார்க்கருள் 07.088 சுந்தரர்
ஏகநாயகனை 09.005 சேந்தனார்

முகவரி: திருவீழிமிழலை அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம், 609505
தொபே. 04366 273050


சோழவளநாட்டில் காவிரித் தென்கரையில் விளங்கும் 61ஆவது தேவாரத்தலம். நாகை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது.
மயிலாடுதுறை - திருவாரூர் இருப்புப் பாதையில் பூந்தோட்டம் இரயில் நிலையத்துக்கு மேற்கே 10 கிமீ. தொலைவில் உள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகளில் செல்லலாம்.
இத்தலம் காத்தியாயன மகரிஷியின் யாகத்தில் தோன்றிய உமாதேவியாரைத் திருமணம் செய்துகொண்டு இறைவன் என்றும் மணக்கோலத்தோடும் இருக்கும் தலம்.
திருமால் சக்கரம் பெறும் பொருட்டு, நாள்தோறும் ஆயிரம் தாமரைப் பூவைக்கொண்டு அர்ச்சிக்க, ஒருநாள் ஒரு மலர் குறைய, அதற்காகத் தமது தாமரை மலர் போன்ற கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்துச் சக்கரம் பெற்றதலம்.
திருநாவுக்கரசு சுவாமிகளும் திருஞானசம்பந்த சுவாமிகளும் படிக்காசு பெற்றுப் பஞ்சம் போக்கியதலம். இத்தலத்து வடக்கு வீதியில் அப்பர் சம்பந்தர் திருமடங்கள் தனித்தனியே இருக்கின்றன.
மூவர் அருளிய தேவாரமும், சேந்தனார் பாடிய திருவிசைப்பாவும், அருணகிரி நாதரின் திருப்புகழும் உள்ளன.
விமானம்:
விண்ணிழி விமானம். இது விஷ்ணுவால் தாபிக்கப் பெற்றது.
மூலத்தானத்துக்குப் பின் பார்வதி பரமேசுவரரது திரு உருவங்கள் உள்ளன. இங்குக் காழிக் கோலத்தைச் சம்பந்தமூர்த்திக்கு இறைவன் காட்டியருளினார்.
விழா:
சித்திரைத் திங்களில் பெருவிழா நிகழும். மணக்கோலத் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. மணவாளப் பெருமான் திருவடியில் திருமால் கண்ணைப் பறித்து அர்ச்சித்த அடையாளம் இன்றும் இருக்கிறது.
சுவாமி நேத்திரார்ப்பணேசர், வீழியழகர் எனவும் வழங்கப் பெறுவர். அம்மை சுந்தரகுசாம்பிகை.
தீர்த்தம்: விஷ்ணு தீர்த்தம்.
தலவிருட்சம்:
வீழிச்செடி.கல்வெட்டு:

இத்தலத்திலுள்ள கல்வெட்டுக்கள் 68.
வீழிமிழலை என்றே இத்தலம் வழங்கப்பெறுகின்றது.
முதற் குலோத்துங்கன் காலத்து உலகுய்யக்கொண்ட சோழவளநாட்டு வேணாட்டுப்பிரமதேயம் திருவீழிமிழலை என வழங்கியது.
சுவாமி பெயர் வீழிநாதர், வீழிமிழலைநாதர் என்பன.
கோயில் பிராகாரத்தில் சிலரால் பிரதிட்டை செய்யப்பெற்ற நின்றருளிய நாயனார், நெறிவார்குழலிநாச்சியார், திருவேட்டீஸ்வரமுடைய மகாதேவர், திருவேகம்பமுடையார், (417, 1908), பார்வதீஸ்வரமுடையார், (418, 1908), திருத்தண்டூன்றிய மகாதேவர் (436, 1908) கோயில்களும் பிரதிட்டிக்கப்பெற்ற இடங்களும் குறிக்கப்பெறுகின்றன.
அம்மை, காமக்கோட்டம் உடைய நாச்சியார் என்று அழைக்கப் பெறுகிறார்.
திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும், மாணிக்கவாசகருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்திருந்தன. முன்னிருவருடைய மடங்களும் வடக்கு வீதியில் இருந்தன என்பதும் அறியக் கிடக்கின்றன. (392, 1928)
ஆதித்தன் மகனாகிய முதற்பராந்தகன் காலத்திலிருந்து பதினொரு சோழமன்னர்களின் காலத்துக் கல்வெட்டுக்களும், சடாவர்மன் சுந்தரபாண்டியன், வீரபாண்டியதேவன் கல்வெட்டுக்களும் விஜயநகர பரம்பரையைச் சேர்ந்த விருப்பண்ண உடையார் கல்வெட்டு ஒன்றும், பெயரறியப்பெறாதன பதினான்குமாக அறுபத்தெட்டுக் கல்வெட்டுக்கள் உள்ளன.
அவற்றுள் இராஜேந்திர சோழன் திருவீழிமிழலை வடக்கு வீதியிலுள்ள திருநாவுக்கரசர் திருமடத்திற்கு நிலம்விட்ட செய்தி அறியப்படுகிறது. (402, 1908)
மூன்றாம் இராஜராஜன் திருவீழிமிழலைக் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் திருவாதவூரர் மாணிக்கவாசகர் படிமத்தைப் பிரதிஷ்டை செய்தான். (409, 1908)
சடாவன்மன் சுந்தரபாண்டிய தேவன் திருக்கை கொட்டித் திருப்பதியம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தான். (414, 1908)
முதல் இராஜராஜ சோழன் காலத்தில் ஐப்பசி ஓணத் திருவிழா தரிசனத்திற்காக வரும் அன்பர்களுக்கு அன்னம் வழங்கக் காசு அளிக்கப்பட்ட செய்தியும் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற்றமையும் அறிவிக்கும் (422, 1908).
முதற் குலோத்துங்கன் தமது ஆட்சி முப்பத்து நான்காம் ஆண்டில் சண்டேஸ்வரப் பிரதிஷ்டை செய்வித்து நித்திய பூசைக்கு ஏற்பாடு செய்தான் (427, 1908).
சிறந்த செய்தியொன்று வாணியின் பாதனான அரிகுலகேசரி விழுப்பரையனால் `சிறீ காலகாலன்` என்னும் வாள், வீழிமிழலை நாதர்க்கு வழங்கப்பெற்றது. (438, 1908)
மாப்பிள்ளைச்சாமி எனப்பெறும் மணவாளத் திருக்கோலப் பெருமான் அழகிய மணவாளப்பெருமான் என்று குறிக்கப் பெறுகின்றார். இந்த மூர்த்தியையும், இராஜேந்திர சோழ அணுக்கப் பல்லவரையர் புதுக்கிப் பிரதிட்டை செய்ததாகத் தெரிகிறது. (444, 1908).

திருவாவடுதுறை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.

 
 
சிற்பி சிற்பி