ஆலம்பொழில்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு ஞானாம்பிகை உடனுறை ஆத்மநாதேசுவரர்

மரம்: ஆல மரம்
குளம்: குடமுருட்டி

பதிகம்: கருவாகிக்கண்ணு -6 -86 திருநாவுக்கரசர்

முகவரி: திருவாலம்பொழில் அஞ்சல்,
திருப்பந்துருத்தி,
திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம், 613103
தொபே. 0435 284538

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பூந்துருத்திக்கு மேற்கில் ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இக்கோயில் மேற்கு நோக்கிய சந்நிதியை உடையது. அஷ்டவசுக்களால் வழிபடப் பெற்றது.


கல்வெட்டு:

இதிலுள்ள கல்வெட்டுக்கள் சிதைந்துள்ளன. அவைகளை அரசாங்கத்தார் படியெடுத்து ஆண்டு அறிக்கையில் வெளியிட்டிலர்.

அக்கல்வெட்டுக்களைப் படித்துப் பார்த்த பொழுது அவைகளில் இறைவர் தென்பரம்பைக்குடி திருவாலம் பொழில் அவைகளில் இறைவர் தென்பரம்பைக் குடி திருவாலம் பொழில் உடைய மகாதேவர் எனக் குறிக்கப் பெற்றுள்ளனர். இவ்வூர்த் திருத்தாண்டகத்திலும் தென்பரம்பைக் குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே எனப் பாடப் பெற்றிருக்கின்றது. இத்திருவாலம் பொழிலுக்குத் தெற்கே வெள்ளான்பிரம்பூர், தென்பிரம்பூர் என்னும் ஊர்கள் இருக்கின்றன.

 
 
சிற்பி சிற்பி