விளநகர் (திருவிளநகர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு தோழிநாயகி உடனுறை துறைகாட்டும் வள்ளலார்


மரம்: விளா மரம்
குளம்: காவிரி

பதிகம்: ஒளிரிளம்பிறை -2 -78 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவிளநகர் அஞ்சல்
மன்னம்பந்தல் வழி
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609305
தொபே. 04364 282129

காவிரித் தென்கரையில் உள்ள நாற்பதாவது தலம். மயிலாடுதுறைக்குக் கிழக்கே 6.கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. மயிலாடுதுறையிலிருந்து செம்பொனார்கோயில் செல்லும் பேருந்து களில் செல்லலாம்.

இறைவர் திருப்பெயர் துறை காட்டும் வள்ளலார். அருள் வித்தகர் என்னும் அந்தணர் பூக்கூடையை எடுத்துக் கொண்டு காவிரி யாற்றில் இறங்கி வந்தபோது, வெள்ளம் அவரை அடித்துக் கொண்டு சென்றது. அவரோ பூக்கூடையை விடாது சிவபெருமானையே சிந்தித்தார். அவருக்கு இறைவர் ஒரு துறையை காட்டிக் கரையேறச் செய்து ஞான உபதேசம் செய்தருளிய காரணத்தால், இப்பெயரை இத்தலத்து நாயகர் பெற்றார். ``காவிரித்துறை காட்டினார்`` என்று இவ்வூர்த் தேவாரத்திலும் குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறைவி திருப்பெயர் தோழிநாயகி.இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. இது தருமை ஆதீன அருளாளுகைக் குட்பட்ட ஆலயம்.




கல்வெட்டு:

இக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் படி எடுக்கப் பட்டுள்ளன. பரகேசரிவர்மன் ஐந்தாவது ஆண்டு உத்தம சோழனின் முதல் மாதேவியார் அர்த்தயாமக் கட்டளைக்காக நிலம் வாங்கித் தந்தனள். அதில் நெறியுடைச் சோழப்பேராறு என்று ஓராற்றின் பேர் குறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை நாயக்கர் நாளில் இக் கோயிலில் அர்த்தமண்டபம், மகாமண்டபம், அரண்மனைப் பணத் திலும் பொதுமக்கள் பணத்திலுமாகக் கட்டப்பட்டன. இக் கோயிலின் துறைகாட்டு மண்டபத்தைத் தீட்சித ஐயன் உபயமாகத் தந்துள்ளான்.

 
 
சிற்பி சிற்பி