வான்மியூர் (திருவான்மியூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு சொக்கநாயகி உடனுறை பால்வண்ணநாதர்


மரம்: வன்னி
குளம்: பாபநாசினி

பதிகங்கள்: கரையுலாங் -2 -4 திருஞானசம்பந்தர்
விரையார்கொன்றை -3 -55 திருஞானசம்பந்தர்
விண்டமா -5 -82 திருநாவுக்கரசர்

முகவரி: சென்னை மாவட்டம் 600041
தொபே. 044 24410477

சென்னையிலுள்ள தலம். வான்மீக முனிவர் பூசித்த பதி யாதலால் இப்பெயர் பெற்றது.

இது மயிலாப்பூருக்குத் தெற்கே 5 கி.மீ. தூரத்தில் இருக் கின்றது. இது தொண்டை நாட்டின் இருபத்தைந்தாவது தலமாகும்.

இறைவர் திருப்பெயர்பால்வண்ணநாதர், இறைவி திருப் பெயர் சொக்கநாயகி.

இலிங்கத்திருமேனி சற்று வடபக்கமாகச் சாய்ந்திருக்கின்றது. வான்மீகி முனிவர்க்கு இவ்வூரில் தனிக்கோயில் இருக்கின்றது. இவ்வூர்த் தலபுராணம் பூவை கல்யாணசுந்தர முதலியார் அவர்களால் எழுதப்பெற்றது. அச்சில் வெளிவந்துள்ளது.
கல்வெட்டு:

இக்கோயிலில் ஏழுகல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டிருக் கின்றன. இராஜேந்திரசோழனுடைய கல்வெட்டுக்கள் ஐந்தும், இராஜாதிராஜனுடைய கல்வெட்டுக்கள் ஐந்தும், இராஜாதி ராஜனுடைய கல்வெட்டுக்கள் மூன்றும் இராஜேந்திரதேவனுடைய கல்வெட்டு மூன்றும் இருக்கின்றன. இவைகளின்படி நுந்தா விளக்கு வைப்பதற்கு ஆடுகள் தானம், கோயில் வழிபாட்டுற்கு நிலதானம், பூமாலை இடுவதற்குப் பொன் தானம், வழிபாட்டிற்குப் பணமும் நெல்லும் தானம்செய்யப் பட்டன.

 
 
சிற்பி சிற்பி