வலிவலம் (திருவலிவலம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு மாழையொண்கண்ணி உடனுறை மனத்துணைநாதர்


மரம்: புன்னை
குளம்: காரணர்கங்கை

பதிகங்கள்:

ஒல்லையாறியு -1 -50 திருஞானசம்பந்தர்

பூவியல்புரி -1 -123 திருஞானசம்பந்தர்

நல்லான்காண் -6 -48 திருநாவுக்கரசர்

ஊனங்கத்துயிர் -7 -67 சுந்தரர்

முகவரி: வலிவலம் அஞ்சல்
திருக்குவளை வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610207
தொபே. 04366 205636

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். திருவாரூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது கரிக்குருவி. சூரியனும், காரணரிஷியும் பூசித்துப் பேறுபெற்றனர். சுவாமிசந்நிதி கட்டுமலைமேல் இருக்கின்றது. கோயிலைச்சுற்றிக் கிழக்குப்பக்கந்தவிர அகழி சூழ்ந்திருக்கிறது. மாடக்கோயிலுள் ஒன்று. சுந்தரமூர்த்திநாயனார், திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் `சொல்லியவேசொல்லி ஏத்துகப்பான்` என இருவர் பாடல் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறார்.

சுவாமி பெயர் மனத்துணைநாதர். அம்மை பெயர் மாழையங் கண்ணி. தலவிருட்சம் புன்னை. தீர்த்தம் காரணர் கங்கை.
கல்வெட்டு:

படியெடுத்தன ஒன்பது உள்ளன. இராஜேந்திரன் III காலத் தன மூன்று. குலோத்துங்கன் காலத்தன இரண்டு. இராஜராஜன் III காலத்தன இரண்டு. சுந்தரபாண்டியன் காலத்தன இரண்டு. இத்தலம் அருமொழித் தேவ வளநாட்டு வலிவலக் கூற்றத்து உபயகுல சுத்த சதுர்வேதி மங்கலமான வலிவலம் என்று வழங்கப்பட்டது(110 of 1911). இறைவன் மனத்துள் தேவர் என்றே கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிறார். உடையார் மனத்துள் நாயனாரதுகோயில் காரியம் பார்ப்பார் சிலரால் தேவப்பெருமான் திருமடத்து எதிர் ஒப்பிலாதார் சோமநாத தேவ முதலியாருக்கு நிலம் மாற்றிக் கொடுக்கப்பட்டது(108 of 1911). இந்தத் திருமடம் மனத்துள் நாயனார் கோயிலுக்குத் தெற்குப் பக்கத்தில் இருக்கிறது(109 of 1911). தென் விடங்கலூர், குலோத்துங்க சோழ நல்லூர் திரிசூலம், பொன் வேய்ந்த பெருமாள் நல்லூர் முதலிய கிராமங்கள் பல வேறு காரியங் களுக்குத் தானமாக அளிக்கப்பெற்றமை அறியப் பெறுகின்றன. திருமூல தேவர் திருமடத்தில் இருந்த கோயில் அர்ச்சகர் ஒருவருக்கு நிலம் விற்கப்பெற்றது என்பதால் திருமூலதேவர் மடம் என்பது ஒன்று இருந்தமை புலனாகும்(116 of 1911).

 
 
சிற்பி சிற்பி