வலம்புரம் (திருவலம்புரம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு வடுவகிர்க்கண்ணியம்மை உடனுறை வலம்புரிநாதர்


மரம்: பனை
குளம்: பிரம, இலட்சுமி, சுவர்ணபங்கய தீர்த்தங்கள்

பதிகங்கள்: தெண்டிரைதேங் -4 -55 திருநாவுக்கரசர்

முகவரி: திருவலம் அஞ்சல்
இராணிப்பேட்டை
குடியாத்தம் வட்டம்

இது மேலப்பெரும்பள்ளம் எனவும் வழங்கப்பெற்று வருகின்றது இறைவனது திருமுடியில் பள்ளம் இருப்பதால் இப்பெயர் பெற்றது என்பர்.

இது பூம்புகார்ப் பல்லவனீச்சரத்திற்குத் தென்மேற்கே 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

மயிலாடுதுறை சீகாழி ஆகிய ஊர்களிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகளில் ஏறி இவ்வூரைக் குறிக்கும் கை காட்டியில் இறங்கிச் சிறிது தூரம் நடந்து சென்றால் ஆலயத்தை அடையலாம்.

இறைவரின் திருப்பெயர் - வலம்புரிநாதர். இறைவியின் திருப்பெயர் - வடுவகிர்க்கண்ணியம்மை. திருமால் வழிபட்டுச் சங்குபெற்ற தலம். இதற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்றும், அப்பர் பதிகம் இரண்டும் சுந்தரர் பதிகம் ஒன்றும் ஆக நான்கு பதிகங்கள் இருக்கின்றன.
கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் விக்கிரம சோழன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாங் குலோத்துங்கன் இவர்களின் காலங்களில் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக் களில், இறைவரின் திருப்பெயர் திருவலம்புரி உடையார் என்றும், இறைவியாரின் திருப்பெயர் தடங்கண்நாச்சியார் என்றும் குறிக்கப்பெற்றுள்ளன. இவ்வூர், விக்கிரமசோழன் கல்வெட்டில் இராசராச வளநாட்டு ஆக்கூர்நாட்டு தலைச்சங்காட்டுத் திருவலம்புரம் என்றும், மூன்றாங் குலோத்துங்கன் கல்வெட்டில் சயங்கொண்ட சோழவளநாட்டு, ஆக்கூர்நாட்டு, தலைச்சங்காட்டுத் திருவலம்புரம் என்றும் கூறப்பெற்றுள்ளது. இக்கோயிலின் கூத்தாடுந்தேவர், அவரது நாச்சியார், பள்ளியறைப் பிராட்டியார், இவர்களை எழுந்தருளுவித்து அவர்களுடைய நாள்வழிபாட்டிற்கு இரண்டேகால்வேலி நிலத்தை அளித்தவன் குலோத்துங்கசோழ வளநாட்டு, விளநாட்டு, ஆலங் குடியிலிருந்த வேளான் கண்டராதித்தன் ஆவன். இது நிகழ்ந்தது விக்கிரமசோழனின் ஆறாம் ஆண்டில் ஆகும்.

இவ்வூர்ச் சபையாராகிய சபையார் மும்முடிசோழன் பேரம்பலத்தில் கூட்டங்கூடி, கோயிலுக்கு வேண்டியவைகளைச் செய்துவந்தனர். இரண்டாம் இராஜாதிராஜன் காலத்தில் சயங்கொண்ட சோழமண்டலத்து மேன்மலைப் பழையனூரார் ஒருவர் இக்கோயிலில் சில படிமங்களை எழுந்தருளுவித்துள்ளார். கோயில்களுக்கு ஆட்களை விற்கும் வழக்கம் இவ்வூர்க் கல்வெட்டுக்களில் கூறப் பெற்றுள்ளது. அம்முறைப்படி இராஜாதிராஜ வளநாட்டு, நாங்கூராகிய ஷ்ரீபாதுளி சதுர்வேதிமங்கலத்துத் தட்டானாகிய சோமன் ஆறு மனிதர்களைப் பதின்மூன்று காசுக்கு விற்றுக் கொடுத்துள்ளான். இங்ஙனமே தலைச்சங்காட்டுத் திருவலம்புரி உடையான் கலியன் குமாரனாகிய தம்பிரான் தோழன் எட்டு ஆட்களை விற்றுக்கொடுத்த செய்திகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

 
 
சிற்பி சிற்பி