வலஞ்சுழி (திருவலஞ்சுழி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு பெரியநாயகி உடனுறை கற்பகநாதேசுவரர்


மரம்: வில்வம்
குளம்: காவிரி, அரசலாறு, சடா தீர்த்தம்

பதிகங்கள்:
விண்டெ லாமல ரவ்விரை 2-2, திருஞானசம்பந்தர்
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே 2-106, திருஞானசம்பந்தர்
பள்ளம் அது ஆய படர் சடை மேல் 3-106, திருஞானசம்பந்தர்
ஓத மார்கட லின்விட முண்டவன் 5-066 திருநாவுக்கரசர்
அலையார் புனற்கங்கை 6-72, திருநாவுக்கரசர்
கருமணிபோற் கண்ட 6-73, திருநாவுக்கரசர்


முகவரி: கும்பகோணம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம், 612302
தொபே. 0435 2454421

பிலத்தினுள் சென்றுவிட்ட காவிரிவெளிப்படும் பொருட்டு ஏரண்ட முனிவர் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து வலமாகச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது.

இது கும்பகோணம் - தஞ்சாவூர் தொடர்வண்டிப் பாதையில், சுவாமிமலை தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே3/4 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரியின் தென்கரைத் தலங்களுள் 25ஆவது ஆகும். கும்பகோணம் - தஞ்சை நெடுஞ்சாலையில் இத் தலம் உள்ளது.

இறைவர் கற்பகநாதேசுரர். இறைவியார் பெரியநாயகி,

தீர்த்தம்: காவிரி.

அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூசித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இங்குக் கொண்டுவந்து எழுந்தருளுவித்து வழிபட்டான்.

வெள்ளைப் பிள்ளையார் கோயில் மிகவும் வேலைப் பாடுடையது. இக்கோயிலில் ஏரண்ட முனிவரின் பிரதிமையும், பக்கத்தில் வலஞ்சுழி நாதர் என்னும் சிவலிங்கத் திருமேனியும் இருக்கின்றன. இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகங்கள் மூன்று, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று ஆக நான்கு பதிகங்கள் இருக்கின்றன.
கல்வெட்டு:

கி. பி. 10, 11, 12ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த சோழ மன்னர்களது கல்வெட்டுக்கள் கோயில்களில் காணப் படுகின்றன. நிலதானம், விளக்குத்தானம், விளக்குக்காக நிலதானம் ஆகியவை பற்றி இவை குறிக்கின்றன. 25-1-1219 ல் சிவபாதசேகரன் என்பான் முந்திய தானங்களை ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றான். இரண்டாம் இராஜராஜன் காலத்தில் திருநாவுக்கரசர், திருவாதவூரடிகள், திருக்கண்ணப்பதேவர் இவர்களின் திருவுருவங்களுக்கு நில தானங்கள் செய்யப்பட்டன. முதலாம் இராஜராஜன், அவன் தேவியான லோகமாதேவியும் அவன் மகளும் (விமலாதித்தன் மனைவி குந்தவை) அரசர்கட்டிய கோயிலுக்குத் திருவாபரணங்கள் கொடுத்துள்ளார்கள்.

 
 
சிற்பி சிற்பி