வல்லம் (திருவல்லம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு வல்லாம்பிகை உடனுறை வல்லநாதர்


மரம்: வில்வம்
குளம்: கௌரிதீர்த்தம்

பதிகம்: எரித்தவன் -1 -113 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவலம் அஞ்சல்
இராணிப்பேட்டை குடியாத்தம் வட்டம்
வேலூர் மாவட்டம், 632515
தொபே. 0416 2236491

தொண்டை நாட்டுத்தலம். வேலூர் ஆர்க்காட்டிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். இத்தலம் இப்பொழுது திருவலம் என வழங்கப்பெறுகிறது. வில்வாரண்யதலம், தீக்காலி என்பான் பூசித்துப் பேறுபெற்றமையான் தீக்காலி வல்லம் எனவும் வழங்கும். நவக் கிரகங்களும், வல்லாளனும் பூசித்துப் பேறுபெற்றனர். சுவாமி வல்ல நாதர். இறைவி வல்லாம்பிகை. தீர்த்தம் கௌரிதீர்த்தம்.
கல்வெட்டு:

கோப்பரகேசரியான இராஜேந்திரசோழன் (கி.பி.1050-62) 3-ஆம் ஆண்டில் உத்தியோகஸ்தன் ஒருவனிடமிருந்து 25 கழஞ்சு பொன்வாங்கித் தீட்சிதரிடங் கொடுத்தான்(75 of 1889). அதேயாண்டில் வாண புரத்திலுள்ள பேரவையோர் சங்கரதேவன் மகனான வைதும்ப சோமநாதனுக்கு 1000 குழி நிலம் விற்றதையும் அவர்கள் அதைத் திருவைய ஈசுவரருக்கு உரிமையாக்கியதையும் குறிக்கிறது(92 of 1889). 4-ஆம் ஆண்டில் முதல் இராஜராஜன் உத்தியோகத்தனான ஈராயிரவன் பல்லவராயனால் இராஜராஜேஸ்வரர் கருப்பக்கிரகம் கட்டப்பெற்றது. 2 விளக்கிற்காக 2000 குழி நிலமும் அளிக்கப்பெற்றது( 299 of 1897).

கோராஜகேசரி வர்மனான இராஜமகேந்திரன் காலத்து 2-ஆம் ஆண்டில் படைத்தலைவனொருவன் திருவல்லம் பேரவையிலிருந்து 800 குழி நிலம்பெற்று அதைக் கோயிலுக்குக் கொடுத்தான். அதன் விலை 64 காசு (22 கழஞ்சு 8 மஞ்சாடி)( 5 of 1890). குலோத்துங்கன் 23ஆம் ஆண்டில் ஒரு கங்கதலைவனால் வீரசோழன் மனைவியான தன்னுடைய மகளுக்கு நன்றுண்டாக விளக்குப் போடப்பெற்றது(300 of 1897). மூன்றாம் குலோத்துங்கன் 8ஆம் ஆண்டில் திரிசூலக்காசு கோயிலுக் களிக்கப்பெற்றது(301of 1897). 34 ஆம் ஆண்டில் கங்க அரசியான அரியபிள்ளை யால் இரண்டு விளக்கு தானம் செய்யப்பெற்றன(303 of 1897). கோராஜகேசரி வர்மன்-1, 7ஆம் ஆண்டில் இறைவி திருவுருவம் செய்யவும் ஒரு விளக்குக்கும் ஒரு பிராமணனால் 1700 குழி நிலமும் தூய்நாட்டில் மந்திரம் பேரவையினின்றும் 1700 குழி நிலமும் வாங்கப்பெற்றன(8 A of 1890). 26ஆம் ஆண்டில் 4ஆம் விக்கிரமாதித்தனிடமும் 3-ஆம் ஜயசிம்ம னிடமும் வெற்றிபெற்றமையும், கோயிலுக்கு விளக்கு பொருத்தியமை யும் தெரிகிறது.(9 of 1890) 7ஆம் ஆண்டில் மதுராந்தக கண்டராதித்தன் கோயிலுக்கு வந்தமையும் 1000 குடங்களால் அபிஷேகித்தமையும், வருமானத்தை ஆராய்ந்தமையும் குறிக்கப்பெற்றுள்ளன(10 of 1890).

கோராஜ இராஜகேசரிவர்மன்-1, 16 ஆம் ஆண்டில் 700 குழி நிலம் சங்கரதேவனுக்கு விற்றமையும் அவன் அதைத் திருவைய ஈசுவரருக்களித்தமையும் தெரிகிறது(11 of 1890). கோராசகேசரிவர்மன் இராஜ ராஜதேவன் 20ஆம் ஆண்டில் 90 ஆடுகள் தானம்செய்தான். 3ஆம் ஆண்டில் தூய்நாட்டிலுள்ள குக்கனூர் கிராமத்தின் வருவாய்களைத் திருவல்லம் கோயிலுக்குக் கொடுத்தான்( 1415 of 1890). மகாவலி வாணராயனது பொன்படுகுட்டத்திலுள்ள சில நிலங்களை ஒருவன் வாங்கி விளக்கிற்காகவும் படையலுக்காகவும் கொடுத்தான்(12 of 1890). வாண வித்தியாதரன் காலத்து விளக்கெரிக்க 20 கழஞ்சு பொன் கொடுக்கப் பெற்றது(298 of 1897). விக்கிரமாதித்தன்-1, வேண்டுகோளின்படி மூன்று கிராமங் கள் (விடேல் விடுகு விக்கிரமாதித்த சதுர்வேதிமங்கலம்) தானம் செய்யப்பட்டன(1A of 1890). வாணராயனது சகம் 810-ல் எட்கூரிலுள்ள ஒரு பார்ப்பனனால் காரநாட்டிலுள்ள வன்னிப்பேடு கிராமத்தாரிடம் 25 கழஞ்சு பொன் கொடுக்கப்பெற்று அதன் வட்டியிலிருந்து விளக்குப் போடப்பெற்றது(1B of 1890). சோழபூபன் மகனான வீரசம்பன் சகம் 1236 இல் அர்த்த மண்டபம் ஞானமூர்த்தி என்ற பெயருடைய துறவியாலும் பிருதா அரசனாலும் கட்டப்பெற்றது. மேலும் கருப்பக்கிருகமும் கட்டப்பெற்றது. (வீரசம்பன் படைத்தலைவனா? ஒருநாயகனா? ஊகிக்க வேண்டியுள்ளது)( 3 of 1890). வாணவித்தியாதர ராஜன் என்கிற வாண ராயன் விளக்கிற்கு நெய்யிட 25 கழஞ்சு பொன் வழங்கினான் (77 of 1889). விசயகண்ட கோபாலதேவன் மூன்றாமாண்டில் அழகிய பல்லவன் காலத்து 3 ஆம் இராஜராஜன் நிலமணியக்காரர் 1.16 பாகவரியையும் 1.5 பாக வரியையும் தள்ளியமை தெரிகிறது(79 of 1889). ராஷ்டிரகுப்த அமோகவர்ஷனன்I மருமகன் காலத்து, பொற்கொல்லன் ஒருவன் கோயிலுக்கு நிலம் தானம் செய்தான்(76 of 1889).

 
 
சிற்பி சிற்பி