மீயச்சூர் (திருமீயச்சூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு சுந்தரநாயகி உடனுறை முயற்சிநாதர்


மரம்: வில்வம்
குளம்: சூரியபுட்கரணி

பதிகம்: காயச்செவ்வி -2 -62 திருஞானசம்பந்தர்

முகவரி: திருமீயச்சூர் அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 609405
தொபே. 9444836526

இது மயிலாடுதுறை பேரளம் தொடர்வண்டிப் பாதையில், பேரளம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 2.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. மயிலாடுதுறையிலிருந்து பேரளம் செல்லப் பல பேருந்துகள் உள்ளன. இது காவிரித் தென்கரையிலுள்ள ஐம்பத்து மூன்றாவது தலம்.

இறைவர் திருப்பெயர் முயற்சிநாதர். இறைவி திருப்பெயர் சுந்தரநாயகி.

தலவிருட்சம் வில்வம் தீர்த்தம் சூரியபுட்கரணி.

சூரியன் வழிபட்டுப் பேறு எய்திய தலம்.

இதற்கு ஞான சம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.

இத் திருமீயச்சூர் கோயில் மூலவிமானம் கஜப்பிரஷ்ட விமானமாகும்.

இக் கோயிலிலே மீயச்சூர் இளங்கோயில் என்னும் வேறு கோயில் ஒன்று வடக்குப் பிரகாரத்தில் இருக்கிறது. இங்குள்ள இறைவர் சகல புவனேச்சுவரர். இறைவியார் மின்னுமேகலாம்பாள். இது காளியால் பூசிக்கப்பட்டது. இதற்குத் திருநாவுக்கரசர் பாடிய பதிகம் ஒன்று இருக்கிறது.
கல்வெட்டு:

இக் கோயிலில் ஏழு கல்வெட்டுக்கள் படியெடுக்கப்ப ட்டுள்ளன. பரகேசரி, இராசகேசரி, சோழர்களில் நான்கும், பாண்டி யர்களில் மூன்றும் ஆக ஏழு ஆகும், அவை கோயிலுக்கு நிலதானம் விளக்குகளுக்கு நிலதானம் இவைகளைக் குறித்தவைகளாக இருக்கின்றன. பதின்மூன்றாம் ஆண்டுத் தொடக் கத்திலேயே பாண்டியராட்சி இங்கேவந்துவிட்டது. இடைக்காலச் சோழர்களின் கல் வெட்டுக்கள் தெரியவில்லை.

 
 
சிற்பி சிற்பி