மணஞ்சேரி (திருமணஞ்சேரி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு யாழினும் மென்மொழியம்மை உடனுறை அருள்வள்ளல்நாதர்


மரம்: வன்னி, கொன்றை, கருஊமத்தை
குளம்: சப்தசாகர தீர்த்தம்

பதிகங்கள்: அயிலாருமம் -2 -16 திருஞானசம்பந்தர்
பட்டநெற்றியர்பாய் -5 -87 திருநாவுக்கரசர்

முகவரி: திருமணஞ்சேரி அஞ்சல்
குத்தாலம்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609813
தொபே. 04364 235002

மயிலாடுதுறை கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், குத்தாலம் தொடர் வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 5.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து இத்தலத்துக்கு நகரப் பேருந்துகள் உள்ளன. இது காவிரியின் வடகரைத்தலங்களுள் ஒன்று.

இறைவர் திருப்பெயர் அருள்வள்ளல்நாதர். இறைவியார் திருப்பெயர் யாழினும் மென்மொழியம்மை.

மன்மதன் பூசித்துப் பேறுபெற்றான். ஆமை பூசித்து மனித உருப்பெற்றது. இதற்கு ஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஒன்று. அப்பர் அருளிய பதிகம் ஒன்று ஆக இரு பதிகங்கள் இருக்கின்றன.கல்வெட்டு:

இவ்வூரில் 28 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தும் சோழர்களுடைய கல்வெட்டுக்களே. (கி.பி.11-12ஆம் நூற்றாண்டு) நாடு - விருதராசபயங்கரநாடு, குறுக்கை நாடு, ஊர் திருமணஞ்சேரி, சுவாமிபெயர் திருக்கற்றளிமாதேவர் பரமசுவாமி என்பன. மற்ற ஊர்கள் கங்கைகொண்ட சோழ சதுர்வேதி மங்கலம், விடேல் விடுகுதேவிமங்கலம், கரிகாலசோழ சதுர்வேதி மங்கலம், திருஎதிர்கொள்பாடி என்பன.

விளக்குக்காகப் பணதானம் 1000, சில யோகிகள் தவசிகள் ஆண்டுக்கொருமுறை பங்குனி மாதத்தில் உணவுக்காக நிலதானம், கோயிலுக்கு நிலதானம் (4-5-1045) சபையார் நிலதானம், (7-2-1123) திருமந்திர ஓலை சொற்படி நிலதானம், விளக்குக்காக 96 ஆடு தானம், கோயிலுக்குப் பொன்கிரீடம், உடைய பிராட்டியார் சொற்படி சந்தனம், துணி, எண்ணெய், திருவிளக்குக்காக 16 கழஞ்சு பொன் தானம், கோயிலில் தினப்படி பூசைக்குத் திட்டம், விளக்குக்கும் அதன் பீடத்திற்கும், எண்ணெய்க்குமாக 96 ஆடு தானம், விளக்குப் பீடம் இவைகளுக்கு 45 காசு தானம், முழவு, விளக்கு, மணி, மூர்த்தி இவைகள் தானம், கல்தானம், இரவு விளக்குத் தானம், குகைகட்டப் பணமும் நிலமும் தானம் முதலியன.

இங்கிருந்த திருமாலைக் கரிகால்சோழ விண்ணகராழ்வான் என்பர். கோயில் பெயர் மணவாளப்பெருமாள். அதன் அதிகாரியின் பெயர் கந்தாடை நம்பி திருமணஞ்சேரி பிச்சன் என்பான் திருப்பணி செய்தான். கல்வெட்ட ஒரு கல்லும் கொடுக்கப்பட்டது. கோயிலில் குடமுழா வாசிப்பவர் பெயர் கூறப்பட்டுள்ளது.

உடைய பிராட்டி செம்பியன் மாதேவியார் கோயில் செலவு திட்டங்களை ஏற்படுத் தினார். நல்லமநாயக்கர் கோபுரம் கட்டினார். ஒரு கல்வெட்டில் அக்கினி புராண சுலோகங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆதித்ததேவன் நாச்சியம்மன் கோயில் கட்டுவதற்கும் ஆலாலசுந்தரம் குகை கட்டுவதற்கும் பணமும் நிலமும் கொடுத்தார்.

 
 
சிற்பி சிற்பி