பேணுபெருந்துறை (திருப்பேணுபெருந்துறை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு மலையரசி உடனுறை சிவானந்தர்


மரம்: வன்னி
குளம்: மங்கள தீர்த்தம்

பதிகம்: பைம்மாநா -1 -42 திருஞானசம்பந்தர்

முகவரி: நாச்சியார்கோயில் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612602
தொபே. 9443650826

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழியில் நாச்சியார் கோயிலை அடுத்துள்ளது.

தலம்: இது திருப்பந்துறை என இன்று வழங்குகிறது. அம்மை, முருகன், பிரமன் இவர்கள் பூசித்ததலம். இறைவன் சிவானந்தர். அம்மை மலையரசி. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விருட்சம் வன்னி. முருகனுக்கு ஊமை நீங்கியதாக வரலாறு.கல்வெட்டு:

அரசியலார் 1932-ல் படியெடுத்த கல்வெட்டுகள் ஐந்து உள்ளன. மதுரைகொண்டபரகேசரி 22-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் திருநறையூர் நாட்டுக் கிராமமான பேணுபெருந்துறை எனவும், இறைவன் பெயர் பேணுபெருந்துறை மகாதேவர் எனவும் குறிக்கப் பெற்றுள்ளன(135 of 1932). இராஜராஜன் ஆட்சி 14 ஆம் ஆண்டில் பாண்டிய குலாசனிவளநாட்டு ஆர்க்காட்டுக் கூற்றத்து அரைசூராள் ஒருத்தியால், அமாவாசையில் சுவாமி அம்மன் பெரியதேவர் அஸ்திரதேவர் வீதி உலாபோதவும், அரிசிலாற்றில் தீர்த்தங்கொடுக்கவும் நிலமளித்தாள்(137 of 1932) . வீரபாண்டியன் ஆட்சி 6ஆம் ஆண்டில், நல்லுடையான் வழுதூரானால் சுவாமி படிமம் செய்து கொடுக்கப்பெற்றது(138 of 1932).

 
 
சிற்பி சிற்பி