புனவாயில் (திருப்புனவாயில்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு கருணைநாயகி உடனுறை பழம்பதிநாதர்


மரம்: புன்னை
குளம்: இலக்குமி தீர்த்தம், பிரம தீர்த்தம்

பதிகங்கள்: மின்னியல்செஞ்சடைவெ -3 -11 திருஞானசம்பந்தர்
சித்தம்நீநினை -7 -50 சுந்தரர்

முகவரி: பொன்பெற்றி
ஆவுடையார்கோயில் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், 614629
தொபே. 04371 239202

இது மிகப் பழமை வாய்ந்தபதி என்பதை, இவ்வூர்ப் பதிகத்தில்

``பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தி லாந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே``
எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளனர். அறந்தாங்கி தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே 11 கி.மீ. தூரத்திலுள்ள திருப்பெருந்துறைக்குத் தெற்கே 21. கி.மீ.தூரத்தில் உள்ளது. ஆவுடையார் கோயிலிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

இறைவரின் திருப்பெயர் - பழம்பதிநாதர். இறைவியின் திருப்பெயர் - கருணைநாயகி. மரம் - புன்னை. தீர்த்தம் - இலக்ஷ்மி தீர்த்தம், பிரம தீர்த்தம். வேதங்கள் வழிபட்டுப் பேறுபெற்றதலம். நந்தியும் மூல லிங்கமும், ஆவுடையாரும் மிகப்பெரியனவாய் உள்ளன. இலிங்கத்திருமேனிக்கு மூன்றுமுழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழப் பரிவட்டமும் வேண்டும் என்பர்.

பாண்டி நாட்டில் உள்ள பதினான்கு தலங்களின் மூர்த்திகளும் இங்கு எழுந்தருளியிருக்கின்றனர். இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் உள்ளன.கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902, No. 162-616.)

இவ்வூர்க் கோயிலில் பாண்டியர்களில், கோனேரின்மை கொண்டான் திரிபுவனச்சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியதேவன், கோச்சடையபன்மரான வீரபாண்டிய தேவன், கோச்சடைய பன்மரான சுந்தரபாண்டிய தேவன், எம்மண்டலமுங் கொண்டருளியகோமாற பன்மரான சுந்தரபாண்டிய தேவன் இவர்களின் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக் கல்வெட்டுக்களில் இறைவர் திருப்புனவாசலுடைய நாயனார், என்னும் பெயரால் குறிக்கப்பெற்றுள்ளனர்.

இவ்வூர் முத்தூர்க் கூற்றத்துக்கு உட்பட்டிருந்தது. கோச்சடையபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவன், தன் ஆட்சியின் பதினான்காம் ஆண்டில் தன்பேரால் ஏற்படுத்திய வீர பாண்டியன் சந்திக்கு நித்திய அமுதுக்கு வேண்டும். அமுதுபடி. கறியமுது, திருமஞ்சனம், திருமேற்பூச்சு, எண்ணெய்க் காப்பு, திருவிளக்குக்கு எண்ணெய், திருப்பரிவட்டம், மற்றும் வேண்டத்தக்கவைகளுக்கும் நிலநிவந்தம் அளித்திருந்தான். கோச்சடையபன்மரான சுந்தர பாண்டிய தேவரின் காலத்தில் ஓரூருடையான் அழகிய மணவாளப் பெருமாளான காலிங்கராயன் தன் பேரால் ஏற்படுத்திய காலிங்கராயன் சந்திக்கு நிலம் விட்டிருந்தான்.

 
 
சிற்பி சிற்பி