புறவார்பனங்காட்டூர் (திருப்புறவார்பனங்காட்டூர்) (பனையபுரம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு அமிர்தவல்லி உடனுறை பனங்காட்டுநாதர்


மரம்: பனை
குளம்: சடாகங்கை

பதிகம்: விண்ணமர்ந்த -2 -53 திருஞானசம்பந்தர்

முகவரி: பனையபுரம் அஞ்சல்
முண்டியம்பாக்கம்
விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 605603
தொபே. 9444897861

பனைமரத்தைத் தலவிருட்சகமாக உடைமையால் பனங்காட்டூர் என்றும், புறாவின் பொருட்டுத் தன் தசையை அரிந்திட்ட சிபிச் சக்கரவர்த்திக்கு அருள்செய்த பதியாதலின் புறவார் பனங்காட்டூர் என்னும் பெயர்பெற்றது என்றும் கூறுவர். புறவு என்பதுபற்றிய புனைந்துரையோ?

விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கேயுள்ள முண்டியம் பாக்கம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 1.5 கி.மீ. தூரத்திலுள்ளது. விழுப்புரம் (திருக்கனூர் வழி) பாண்டிச்சேரி செல்லும் பேருந்துகளில் கோயிலை அடையலாம். இது நடு நாட்டுத் தலங்களுள் ஒன்று.

இறைவரது திருப்பெயர் பனங்காட்டீசுவரர். இறைவியார் திருப்பெயர் புறவம்மை. தலவிருட்சம் பனை. சூரியன் பூசித்துப் பேறுபெற்றான். இத்தலத்தில் சித்திரை முதல் தேதி முதல் ஏழாந்தேதி வரை ஒவ்வொருநாளும் சூரியன் தோன்றும்பொழுது, சுவாமிமேலும் அம்மன்மேலும் கிரணங்கள் விழுகின்றன.கல்வெட்டு:

இக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. குலோத்துங்க சோழன் 1 தனது எட்டாம் ஆண்டில் ஒரு விளக்கிற்காகப் பணம் கொடுத்துள்ளான்.

இறைவன் பெயர் திருப்பனங்காடுடைய மகாதேவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. கோனேரின்மைகொண்டான் (பட்டப்பெயர்) காலத்தில் இக்கோயில், திருப்புறவார் பனங்காடுடையார் கோயில் என வழங்கப்பட்டது. அரசன் நலத்தின் பொருட்டுக் கோதண்டராமன் சந்தி என்ற விழா நடத்துவதற்காக நிலதானம் செய்யப்பட்டது.

பரகேசரி ஆதி ராஜேந்திர தேவன் மூன்றாம் ஆண்டில், நில தானம் செய்யப்பட்டது.

 
 
சிற்பி சிற்பி